- Home
- Tamil Nadu News
- சென்னை மெட்ரோ ரயில் கட்டண சலுகையில் அதிரடி மாற்றம்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் கட்டண சலுகையில் அதிரடி மாற்றம்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் கட்டண சலுகையில் அதிரடி மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 10% கட்டண சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. மொபைல் செயலி மூலம் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளன. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி ஆகிய வழித்தடங்களிலும் 118.9 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த பணிகள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் 10 சதவீத தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 18 மாவட்டங்களில் மழை பிச்சு உதறப்போகுது! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!
மெட்ரோ ரயில் கட்டண சலுகை
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவுக்கு 10 சதவீத தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்ப பெறப்படுகிறது.
டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20 சதவீதம் தள்ளுபடி கட்டணத்துடன் பெற்றுக் கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரயில்களுக்கு பயணிகள் இடையே தொடர்ந்து மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 01.01.2025 முதல் 31.01.2025 வரை மொத்தம் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி 10, 2025 அன்று மட்டும் ஒரே நாளில் 3,60,997 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு சலுகையை அறிவித்து வருகிறது. மேலும் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்கள், பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி நாளின்போதும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மக்களுக்கு குட்நியூஸ்! வேகமெடுக்கும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள்!