MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழ்நாட்டில் இந்த 18 மாவட்டங்களில் மழை பிச்சு உதறப்போகுது! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!

தமிழ்நாட்டில் இந்த 18 மாவட்டங்களில் மழை பிச்சு உதறப்போகுது! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 01 2025, 08:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தஞ்சாவூர், தென்காசி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Tamilnadu Weather Update

Tamilnadu Weather Update

வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதை அடுத்து தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். அதே நேரத்தில் இரவு நேரங்களில் பனிபொழிவும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு,  நாகப்பட்டினம் மாவட்டம் சித்தாய்மூர், கச்சநகரம், பாங்கல், கொளப்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

36
Tamilnadu Rain

Tamilnadu Rain

இந்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகிறது என்ற தகவல் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
Rain update

Rain update

நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 04 மற்றும் 06ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

56
Chennai Weather Update

Chennai Weather Update

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 -25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது. 

66
Tamilnadu Rain Alert

Tamilnadu Rain Alert

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
சென்னை வானிலை ஆய்வு மையம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved