கைவிட்ட நீதிமன்றம்! திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சிக்கல்!
வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
DMK MP Kathir Anand
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜனவரி 3ம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
Enforcement Directorate
கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 4-ம் தேதி நள்ளிரவு வரை 44 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் முக்கிய ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அந்த கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இதையும் படிங்க: செம ஹேப்பியில் பள்ளி மாணவர்கள்! இந்த மாவட்டங்களுக்கு 8 நாட்கள் பொங்கல் விடுமுறை!
Chennai High Court
இந்நிலையில், அந்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Kingston Engineering College
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்: கிங்ஸ்டன் கல்லூரியில் 1,400 மாணவர்கள் படிப்பதாகவும் அவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறினார். கல்லூரியின் சர்வர் அறை சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் இது மாணவர்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார். மாணவர்கள் நலன் கருதி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என வாதிட்டார்.
இதையும் படிங்க: உணவுத் திருவிழாவில் சாதனை! எத்தனை கோடி வருவாய் தெரியுமா?
Kathir Anand News
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்: சோதனைக்கு சென்ற போது தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை. சர்வர் அறையின் சாவியை கூட கொடுக்கவில்லை. கார்பெண்டர் உதவியுடன் தான் அறைகள் திறக்கப்பட்டதாகவும் கூறினார். கல்லூரியில் இருந்து இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் சர்வர் ரூமில் இருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ய ஒத்துழைக்காததால் தான் சர்வர் ரூம்க்கு சீல் வைக்கப்பட்டது.
Kathir Anand Petition Dismissed
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன் சோதனைக்கு சென்றபோது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறுவது தவறு. பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை தாங்கள் அளித்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.