- Home
- Tamil Nadu News
- விபத்தில் முதல்வரான இபிஎஸ்.. இப்படியா விவஸ்தை இல்லாம பேசுவீங்க..? டேட்டாவோடு போட்டு தாக்கும் திமுக
விபத்தில் முதல்வரான இபிஎஸ்.. இப்படியா விவஸ்தை இல்லாம பேசுவீங்க..? டேட்டாவோடு போட்டு தாக்கும் திமுக
அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் முழுமையான நிதி ஒதுக்கி, 60 விழுக்காடு பணிகள் தி.மு.க. ஆட்சியில்தான் செய்யப்பட்டன. அதனால்தான் இன்று ஆயிரம் நீர் நிலைகள் நிரம்பி, 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது என திமுக தெரிவித்துள்ளது.

விபத்தில் முதல்வரான பழனிசாமி
அத்திக்கடவு அவினாசி திட்டம், முதலீடு, வேலைவாய்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசரம் மேற்கொண்டு வரும் நிலையில் இது தெடார்பாக திமுக சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அடித்தகாற்றில் தெருவில் கிடந்த இலை கோபுரத்தில் ஒட்டிக்கொண்டது போல விபத்தில் முதலமைச்சரான பழனிசாமி தான் வகித்த பொறுப்புக்கு மரியாதை இன்றி, விவஸ்தை இன்றி பேசி வருகிறார்.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றிய திமுக
அதில் முதன்மையாக, அத்திக்கடவு அவினாசி, முதலீடு, வேலைவாய்ப்பு, குடும்ப அரசியல் என ஏடாகூடமாக வெந்தும், வேகாததுமாக நிறைய பேசியிருக்கிறார். முதலில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்றைய முதலமைச்சர் பழனிசாமி, அத்திக்கடவு அவினாசி தொடங்கி வைத்தாரே தவிர முழுமையான நிதியை ஒதுக்கவில்லை. விவசாயிகளிடம் நிலங்களையும் பெறவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினையை தீர்த்து, முழுமையான நிதி ஒதுக்கி, 60 விழுக்காடு பணிகள் தி.மு.க. ஆட்சியில்தான் செய்யப்பட்டன. அதனால்தான் இன்று ஆயிரம் நீர் நிலைகள் நிரம்பி, 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது.
வேலைவாய்ப்புக்கு வேறு DATA தேவையா?
இரண்டாவது, இந்த நான்காண்டுகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 29.64 இலட்சமாக உயர்ந்துள்ளதென உங்களின் கூட்டணியில் உள்ள ஒன்றிய பாஜக அரசின் PF புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதைவிட தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு வேறு DATA தேவையா? இந்தியாவிலேயே 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ள ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்!
இது வெறும் டிரெய்லர் தான்..
மின்னணு பொருட்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடுதான்; இதெல்லாம் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியில்தான். மேலும், இதெல்லாம் வெறும் டிரெய்லர்தான்; 2026ல் 7’வது முறையாக கழக ஆட்சி அமையும்; திராவிட மாடல் 2.O ஆட்சியில் மேலும் பல புதிய உச்சங்களை தமிழ்நாடு தொடும்! அப்போதும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியை மட்டுமே பரிசாகத் தருவார்கள்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

