- Home
- Tamil Nadu News
- 5,000 பேருக்கு வேலை.! ரூ. 1000 கோடி முதலீடு - இளைஞர்களுக்கு தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு
5,000 பேருக்கு வேலை.! ரூ. 1000 கோடி முதலீடு - இளைஞர்களுக்கு தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் காஞ்சிபுரத்தில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

Dixon Technologies plans to invest Rs 1000 crore in Kanchipuram : தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது.
job opportunities
முதலீடுகள் ஈர்க்கும் தமிழக அரசு
முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டு, 10,14,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கபட்டுள்ளது. இந்த நிலையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில்,
Kanchipuram job opportunities
5ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Dixon Technologies
மடிக்கணினி,ஒருங்கிணைந்த கணினி மின்னணு உற்பத்திச் சேவைகள்
அதன்படி, மடிக்கணினி (Laptop) மற்றும் ஒருங்கிணைந்த கணினி (All in One PC) உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் (Electronics Manufacturing Services) திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவான்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி (Guidance) நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது.