MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம்.! ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு

மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம்.! ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 08 2025, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
Image Credit : GOOGLE

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

ஆசிரியர்கள் தான் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக உள்ளனர். எனவே ஆசிரியர் இல்லையென்றால் மாணவர்களின் கல்வி பெரும் அளவில் பாதிக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் சுமார் 4,500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையெனவும், மேலும் 19,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் ஒன்று கூறப்படுகிறது.

 ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இன்று சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு
Image Credit : GOOGLE

ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு

மேலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊரை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள். எனவே தங்களது சொந்த ஊரில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரிய விருப்பப்பட்டு பணியிட மாறுதல் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு இந்தாண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்த கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 7 முதல் 11 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்திற்குள் ஜூலை 25 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 26, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பள்ளிகல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல்
Image Credit : our own

மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல்

இதனிடையே ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக பழங்குடியினர் நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ,  நடுநிலைப்பள்ளி , ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர். உடற்கல்வி இயக்குநர் , உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு

44
நாளை பணியிட மாறுதல் கலந்தாய்வு
Image Credit : AI IMAGE GENERATED WITH GEMINI

நாளை பணியிட மாறுதல் கலந்தாய்வு

மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு 09.07.2025 அன்று காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம்/ பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
ஆசிரியர்
பள்ளி மாணவர்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: இந்த ஆவணங்கள் இருந்தா போதும்.! ரூ.1.20 லட்சம் மானியம் கிடைக்கும்.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
Recommended image2
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image3
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Related Stories
Recommended image1
4000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
Recommended image2
அதிமுக கோட்டையில் போட்டியிட விரும்பும் டிடிவி தினகரன்? எந்த தொகுதி? என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved