- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட விடுமுறை ஏப்ரல் 19-க்கு பதிலாக ஏப்ரல் 26-ம் தேதி ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

school holiday
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது.
School Holidays
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 19ம் தேதி வேலை நாட்களக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
pudukkottai district collector
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா ஏப்ரல் 07ம் தேதி அன்று நடைபெற்றது. அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
government employee
ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும் வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.? தமிழ் புத்தாண்டு பரிசாக வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
School Holidays
அரசு அலுவலகங்கள் செயல்படும்
ஏற்கனவே பணி நாளாக அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 19ம் தினங்களில் தொடர் விடுமுறைகள் வருவதால் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 26ம் சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும் , வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு ஏப்ரல் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.