- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.? தமிழ் புத்தாண்டு பரிசாக வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.? தமிழ் புத்தாண்டு பரிசாக வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு பரிசாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

Dearness allowance hike announcement for Tamil Nadu government employees : நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக உள்ளனர். அந்த வகையில் மழை, வெள்ள பாதிப்பு, இயற்கை பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு உரிய பலன் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு அரசுகள் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதன் படி, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன் படி பணவீக்கம் மற்றும் விலை வாசி உயர்வு அடிப்படையில், அகவிலைப்படியானது மாற்றி அமைக்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் படி அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதன் காரணமாக பல லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன் அடைந்தனர். இதனையடுத்து இந்தாண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Dearness allowance hike
மீண்டும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 53ல் இருந்து 55 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்ந்தது. நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தது. இதனையடுத்து தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்ந்தும் என அரசு ஊழியர்கள் காத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பல முறை ஆலோசனை மேற்கொண்டும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை கொண்டாட்ட பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி இன்றோ அல்லது நாளையோ அகவிலைப்படி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu government employees
16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 16 லட்சம் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வின் காரணமாக பயன் பெறுவார்கள். முன்னதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியகாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு கால முறை ஊதியத்தில் பனிபுரியும் பணியாளர்கள்.
தொகுப்பூதியம். மதிப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.01.2025 முதல் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அதாவது 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டு என கேட்டுகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.