கனமழை.! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Chennai Rains
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் பல இடங்களிலும் மழையானது பரவலாக பெய்து வருகிறது. தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடி,மின்னலோடு கன மழை
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
விடுமுறை இல்லை
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவில் இருந்து இடி மின்னலோடு மழை பெய்து வருகிறது. மழையானது இன்று காலையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Rains
வழக்கம் போல் செயல்படும்
இதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போல காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.