MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN School: ஏப்ரல் 30 வரைக்கும் தான் டைம்.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

TN School: ஏப்ரல் 30 வரைக்கும் தான் டைம்.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

School Education Department: தமிழக பள்ளிக்கல்வித்துறை, 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஏப்ரல் 30-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 28 2026, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி மாணவர்கள்
Image Credit : our own

பள்ளி மாணவர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே 1 முதல் 9 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ஏப்ரல் 1 முதல் 16ம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 17ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2026 –2027ம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் அதிகம் இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

24
பள்ளிக்கல்வித்துறை
Image Credit : our own

பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்​களின் முழு ஆண்​டுத் தேர்வு மதிப்​பெண்​களை எமிஸ் தளத்​தில் ஏப்​ரல் 30-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Related image1
பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய 9 அதிர்ஷ்ட வாஸ்து பொருட்கள் இவைதான்!
Related image2
சிஎன்ஜி சந்தையில் மஹிந்திராவின் என்ட்ரி! ஆட்டம் காணப்போகும் மாருதி, டாடா கோட்டை! அப்படி என்ன ஸ்பெஷல்?
34
முழு ஆண்​டுத் தேர்​வு​கள்
Image Credit : Google

முழு ஆண்​டுத் தேர்​வு​கள்

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை​யில்: தொடக்​கக் கல்வி இயக்​ககத்​தின்​ கீழ் செயல்​படும் அனைத்து அரசு, அரசு நிதி​யுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 3-ம் பருவ மதிப்​பீடு மற்​றும் முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நடை​பெற்​றுள்​ளன.

44
எமிஸ் தளம்
Image Credit : our own

எமிஸ் தளம்

இத்​தேர்​வு​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களின் மதிப்​பெண்​களை ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​கள் ஏப்​ரல் 30-ம் தேதிக்​குள் ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்​து, மாணவர் தேர்ச்சி அறிக்​கைக்கு வட்​டாரக் கல்வி அலு​வலர்​களிடம் ஒப்​புதல் பெற வேண்​டும். நடப்பு (2025-26) கல்வி ஆண்​டில் கற்​றல் செயல்​பாட்டை நிறைவு செய்​யும் மாணவர்​களை அடுத்த வகுப்​புக்கு தேர்ச்சி அளிப்​பது. மாற்​றுச் சான்​றிதழ் வழங்​கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்​கொள்ள வேண்​டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
பள்ளிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
Recommended image2
வெப்பத்தில் கொதிக்கும் தமிழகத்திற்கு 'கூலிங்' அப்டேட்.. 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. ஜில் நியூஸ்!
Recommended image3
Now Playing
Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
Related Stories
Recommended image1
பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய 9 அதிர்ஷ்ட வாஸ்து பொருட்கள் இவைதான்!
Recommended image2
சிஎன்ஜி சந்தையில் மஹிந்திராவின் என்ட்ரி! ஆட்டம் காணப்போகும் மாருதி, டாடா கோட்டை! அப்படி என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved