கலங்கிய கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
Dindigul hospital Fire Accident: திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

Dindigul Hospital
திண்டுக்கல் - திருச்சி சாலையில் நேருஜி மேம்பாலம் அருகில் சிட்டி ஹாஸ்பிடல் செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தரைதளத்தில் வரவேற்பு அறையும், முதல் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு. இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும், மூன்றாவது தளத்தில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை. நான்காவது தளத்தில் ஊழியர்கள் அறைகள் உள்ளன.
Dindigul Hospital Fire
இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இதனையடுத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
CM Stalin
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (30) த/பெ.ஜெகநாதன், மாரியம்மாள் (50) க/பெ.ஜெகநாதன், தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (50) த/பெ. கந்தசாமி, சுப்புலட்சுமி (45) க/பெ.சுருளி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (36) த/பெ.ராஜேந்திரன், கோபிகா (6) த/பெ. ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
Dindigul Hospital Fire Accident
மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
Tamilnadu Government
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.