MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • AIADMK: அதிமுகவை உடைக்க ரூ.1000 கோடி கைமாறியதா? பின்னணி இருக்கும் பெண்? வெளியான அதிர்ச்சி தகவல்!

AIADMK: அதிமுகவை உடைக்க ரூ.1000 கோடி கைமாறியதா? பின்னணி இருக்கும் பெண்? வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு பின்னணியில் இருப்பது அதிமுக பெண் எம்எல்ஏ லீமாரோஸ் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே அதிமுக - தவெக கூட்டணி குறித்து முதன்முதலில் பேசியவர்களில் லீமா ரோஸ்.

3 Min read
Author : vinoth kumar
Published : May 15 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தவெகவுக்கு வாக்களித்த அதிமுக எம்எல்ஏ
Image Credit : Asianet News

தவெகவுக்கு வாக்களித்த அதிமுக எம்எல்ஏ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக பிளவு குறித்து தான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தொடர் தோல்வியால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் அகட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் ஒரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தவெக ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்தனர். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேர் விஜய்க்கு எதிராக வாக்களித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
தகுதி நீக்கம் செய்ய திட்டம்
Image Credit : Asianet News

தகுதி நீக்கம் செய்ய திட்டம்

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தவெக ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்தனர். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேர் விஜய்க்கு எதிராக வாக்களித்தனர். இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை எதிர்த்து வாக்கு அளித்த நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

Related Articles

Related image1
இபிஎஸ்-ஐ காலி செய்ய காத்திருக்கும் மார்ட்டின் மனைவி? எப்படி தெரியுமா? பகீர் கிளப்பும் முக்கிய பிரமுகர்
Related image2
அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
37
சி.வி.சண்முகம் தரப்பு எதிர்ப்பு
Image Credit : Asianet News

சி.வி.சண்முகம் தரப்பு எதிர்ப்பு

மேலும் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் கோரிக்கை விடுத்தனர். இதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர்கள் சுட்டிக் காட்டி மனுவை கொடுத்தனர். மற்றொரு புறம் நாங்கள் தான் உண்மையான அதிமுக. அதிமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் . எங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

47
அதிமுக பிளவுக்கு லீமா ரோஸ்
Image Credit : Asianet News

அதிமுக பிளவுக்கு லீமா ரோஸ்

இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு பின்னணியில் இருப்பது அதிமுக பெண் எம்எல்ஏ லீமாரோஸ் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே அதிமுக - தவெக கூட்டணி குறித்து முதன்முதலில் பேசியவர்களில் லீமா ரோஸ். குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றபோது, அங்கு லீமா ரோஸும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வேலுமணி தரப்பிற்கும் தவெகவிற்கும் இடையே பாலமாக இருப்பது லீமாரோஸ் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

57
ஆதவ் அர்ஜூனாவின் மாமியார்
Image Credit : Asianet News

ஆதவ் அர்ஜூனாவின் மாமியார்

லீமா ரோஸ் தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்திய ஜனநாயகக் கட்சியில் முக்கிய பதவியில் இருந்த லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து அதிமுகவில் இணைவதற்கு எஸ்.பி.வேலுமணி முக்கிய காரணம். கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

67
 லீமா ரோஸை அழைத்த வந்த எஸ்.பி.வேலுமணி
Image Credit : Asianet News

லீமா ரோஸை அழைத்த வந்த எஸ்.பி.வேலுமணி

இதனிடையே அதிமுகவில் பிளவு ஏற்படுத்த லாட்டரி சீட்டு பணம் ரூ.1000 கோடி கை மாறியதாக அதிமுக பிரமுகர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இபிஎஸ் ஆதரவாளரான அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: புரோக்கர் மணிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். லீமா ரோஸை அழைத்து வந்து வற்புறுத்தி கட்சியில் சேர்த்து பதவி போட்ட அப்போ பொதுச்செயலாளர் செய்தது செல்லும், இவர்களுக்கு எல்லாம் எம்எல்ஏ சீட் கொடுத்த அப்போ பொதுச்செயலாளர் செல்லும், அப்போ இனித்தது.

77
லாட்டரி சீட்டு பணம் 1000 கோடி ரூபாய்
Image Credit : Asianet News

லாட்டரி சீட்டு பணம் 1000 கோடி ரூபாய்

இப்போ இவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். லாட்டரி சீட்டு பணத்தை 1000 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி இந்தக் கட்சியைப் பிளவு பண்ணி ஒரு பெண்மணியை கட்சிக்கு தலைமையாக்க வேண்டும் என இந்த புரோக்கர் மணி திட்டம் போட்டார். இவர்களுக்கு சீட் கொடுத்தது செல்லும், லீமா ரோஸை கொண்டு வந்து கட்சியில் சேர்த்தது செல்லும், அவர்களுக்கு பதவி கொடுத்தது செல்லும், இப்போ கட்சியை உடைத்து யார் காலிலோ போடுவதற்கு பணம் வாங்கிய பிறகு கத்திட்டு இருக்கிறார்கள் என எஸ்.பி.வேலுமணியை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
எஸ். பி. வேலுமணி
எடப்பாடி பழனிசாமி
சி.வி.சண்முகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Supplementary Examination: மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? கவலை வேண்டாம்! துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
Recommended image3
TASMAC: அதிரடி காட்டும் முதல்வர் விஜய்.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா ரூ.10 கேட்டால் ஆப்பு! குஷியில் குடிமகன்கள்!
Related Stories
Recommended image1
இபிஎஸ்-ஐ காலி செய்ய காத்திருக்கும் மார்ட்டின் மனைவி? எப்படி தெரியுமா? பகீர் கிளப்பும் முக்கிய பிரமுகர்
Recommended image2
அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved