பொங்கல் வேட்டி, சேலை எப்போது கிடைக்கும்.? தேதி குறித்த தமிழக அரசு
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையும் வழங்கப்படும். டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
Pongal Celebration
பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தற்போதே பொங்கல் பண்டிகை கலைகட்ட தொடங்கியுள்ளது. புத்தாடைகளை வாங்க மக்கள் கூட்டம் துணிக்கடைகளில் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பொதுமக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
pongal token
பொங்கல் பரிசு தொகுப்பு
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் 1000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்காத காரணத்தால் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லையென தமிழக அரசு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இருந்த போதும் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் பச்சரிசி, சக்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணியானது தற்போது தொடங்கியுள்ளது.
pongal gift
வேட்டி சேலை வழங்கும் திட்டம்
வருகிற ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்போடு இலவசமாக வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்படவுள்ளது. இதற்காக பல வண்ணங்களில் சேலைகள் தயாராகியுள்ளது. அதன் படி 3அரை லட்சம் வேட்டி மற்றும் சேலைகள் தயாராக உள்ளது.
pongal gift
எத்தனை பேருக்கு பொங்கல் தொகுப்பு
2025 பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட உள்ளது. 50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 9ஆம் தேதி பொங்கல் பரிச தொகுப்போடு வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்படவுள்ளது.