- Home
- Tamil Nadu News
- தர்மபுரியில் திமுகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி..! முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்ததால் அதிர்ச்சி'
தர்மபுரியில் திமுகவுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி..! முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்ததால் அதிர்ச்சி'
DMK members join ADMK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தருமபுரி மாவட்டத்தில், ஆளும் திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மக்களை சந்திக்க தொகுதி தொகுதியாக செல்ல தொடங்கியுள்ளனர். இதே போல மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் தங்கள் அணியில் இணைக்க போட்டி போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக, பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் அதிமுகவிற்கு இணைத்து அதிரடி அரசியல் மேற்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி, அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளரும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 'மக்களைக் காப்போப்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது தருமரி மாவட்டத்தில் எடப்பாடி K. பழனிசாமியை திமுக-வைச் சேர்ந்த தருமபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் P.M.S. ஆனந்த் அவர்கள் தலைமையில், வி. முருகன், டி. மணிகண்டன், டி. கன்னியப்பன், டி. முருகன், ஜி. சக்திவேல், கார்த்தி உள்ளிட்டோரும்;
கொங்குநாடு இளைஞர் பேரவையின் மாவட்டப் பொறுப்பாளர் மா. அறிவானந்தம் (எ) அறிவரசு அவர்கள் தலைமையில் 180 பேர்களும்; கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 120 பேர்களும்; தேமுதிக-வைச் சேர்ந்த நிர்வாகிகளான வேடியப்பன், மாதையன், சுரேஷ், சுகுணா, ரமேஷ் உள்ளிட்ட 20 பேர்களும், பா.ம.க-வைச் சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட 15 பேர்களும்;
மதிமுக-வைச் சேர்ந்த நாகேந்திரன், பாரதி, சிலம்பூ, சேகர், பழனிவேல் உள்ளிட்ட 25 பேர்களும் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன், M.L.A, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.