- Home
- Tamil Nadu News
- மதுரை டூ சென்னை புறப்பட்ட விமானம்! நடுவானில் திடீரென! ஷாக்கான பைலட்! பதறிய 76 பயணிகள்!
மதுரை டூ சென்னை புறப்பட்ட விமானம்! நடுவானில் திடீரென! ஷாக்கான பைலட்! பதறிய 76 பயணிகள்!
Indigo Flight: மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் நடுவானில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானி சென்னை விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

ஏர் இந்தியா விமானம்
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு அடுத்தடுத்து விமானங்கள் விபத்தில் சிக்குவதும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. இதனால் விமானத்தில் செல்லும் பயணிகள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஒரு வித அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 76 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் முன்பக்க கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்பக்க கண்ணாடி
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விமானி சென்னை விமான நிலைய ஏர் டிராபிக் கன்ரோல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதனயடுத்து அவசர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த நிலையில் விமானத்தை இறக்க அனுமதி அளித்தனர். இதனையடுத்து விமானி எந்த அசபாவிதம் இன்றி பத்திரமாக தரையிரங்கினார். இதனால் விமானத்தில் இருந்த 74 பயணிகள், 5 விமான பணியாளர்கள் என மொத்தம் 79 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமான பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில் விமானத்தின் முன்பக்க கண்ணாடியை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.