பொங்கல் பரிசு தொகுப்பு 5 ஆயிரம் ரூபாய்.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கடிதம்
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பொங்கல் தொகுப்போடு ரூ.5000 வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pongal Gift Package
பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையை கிராமங்களில் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் பொங்கலிட்டு நன்றி தெரிவிப்பார்கள். அடுத்தாக மாட்டு பொங்கல் தினத்தில் மாடுகளுக்கு அலங்காரம் செய்தும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியும் கொண்டாடி வருகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையையொட்டி இந்தாண்டு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
pongal festivel
பொங்கல் பரிசு தொகுப்பு
இதனால் பல லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு சார்பாக அனைத்து மக்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் மு.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
pongal gift
நிவராண தொகை கோரிக்கை
கட்டுமான தொழிலாளர்களை நலன் காக்கும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் நிவாரண தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சமாகவும், இயற்கை மரணம் அடைந்தால் வழங்கப்படும் நிவாரண உதவி தொகையை 50 ஆயிரம் என்பதை 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
pongal token
ரூ.5ஆயிரம் பொங்கல் பரிசு தொகை
இந்த திட்டத்தை கட்டமான தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பதிவு செய்தவுடனும், புதுப்பித்த பிறகு ஒரு மாதத்தில் உறுப்பினர் அட்டை கிடைத்திட வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கட்டுமானம் மற்றும் அமைப்புசார தொழிலாளர்களுக்கு வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் தொகுப்போடு சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கிட வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ration shop pongal gift
இந்தாண்டு பொங்கல் பரிசு
இதனிடையே தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பாக ஆயிரம் ரூபாய், கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது.