- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் எங்கு சென்றாலும் விட மாட்டோம்.! அமித்ஷாவிற்கு எதிராக களம் இறங்க ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்
தமிழகத்தில் எங்கு சென்றாலும் விட மாட்டோம்.! அமித்ஷாவிற்கு எதிராக களம் இறங்க ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். ஆளுநரின் முரண்பாடான கருத்துகளையும் சுட்டிக்காட்டினார்.

அமித்ஷாவிற்கு எதிராக களம் இறங்க ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்
காந்தியடிகளின் 78 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் துரத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், இது போன்ற சம்பவங்களை காவல்துறை இருப்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இசிஆர் - பெண்களை துரத்திய மர்ம நபர்கள்
காந்தி சொன்னதை போல ஒரு பெண் நகை அணிந்துக் கொண்டு, நள்ளிரவு 12 மணிக்கு நடந்து சென்று வீடு போய் சேர்கிறார் என்றால் அதுதான் உண்மையான சுதந்திரம் என கூறினார். இத்தகைய அருவருக்கத்தக்க தலைகுனிவை ஏற்படுத்துகிற செயல், தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டை சீர்குலைக்கும் சிலரால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பெயரும் பாதிக்கப்படுகிறது என வேதனை தெரிவித்தார். இனி வரும் காலங்களில் பெண்களுக்கு எதிராக யாரும் தவறு செய்யாத அளவுக்கு காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும்.
ஆளுநருக்கு எதிர்ப்பு
கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவி, இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது என சொன்னார். இது எந்த வாய் அது எந்த வாய் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அமித்ஷாவிற்கு எதிராக போராட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்திலும், அவர் குறித்த புரிதல் இல்லாமல் பேசியதற்கு கோடான கோடி மக்களின் கோபத்துக்கும் வருத்தத்திற்கும் ஆளாகி உள்ளார். எனவே தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார் .