MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Politics: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் 'மெகா' ஊழல்! இவர் தான் காரணமா? ஜோதிமணி பகீர் குற்றச்சாட்டு!

TN Politics: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் 'மெகா' ஊழல்! இவர் தான் காரணமா? ஜோதிமணி பகீர் குற்றச்சாட்டு!

TN Politics: சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் மெகா ஊழல் நடந்துள்ளதாக அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : May 29 2026, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காங்கிரசையும் உட்கட்சி பூசலையும் பிரிக்க முடியாது
Image Credit : our own

காங்கிரசையும் உட்கட்சி பூசலையும் பிரிக்க முடியாது

பொதுவாக எந்த ஒரு பெரிய கட்சி என்றாலும் சரி, சிறிய கட்சி என்றாலும் சரி உட்கட்சி பூசல் இருப்பது இயல்பு தான். ஆனால் இது உடனே சரி செய்யப்பட்டு விடும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டும் உட்கட்சி பூசல், கோஷ்டி பூசல் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆள்கின்ற மாநிலமாக இருந்தாலும் சரி இதே நிலைமை தான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என ஒரு தரப்பினரும் மல்லூக்கட்டியதை நாடு அறியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் 'மெகா' ஊழல்
Image Credit : google

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் 'மெகா' ஊழல்

கடைசியில் திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்பார்த்தபடி தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டி விட்டு, ஆளும்கட்சியான தவெகவில் ஐக்கியமாகி அமைச்சரவையும் பெற்று விட்டது. இந்த நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மெகா ஊழல் நடந்துள்ளதாக அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக ஜோதிமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிப்பு

கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை, வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள், வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தேரதலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

Related Articles

Related image1
TN Politics: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Related image2
TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?
34
கமிட்டி மீது குற்றச்சாட்டு
Image Credit : ANI

கமிட்டி மீது குற்றச்சாட்டு

தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே. தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழ்நாடு சட்டமன்ற தேரதல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.

44
காங்கிரஸில் சீர்திருத்தம் வேண்டும்
Image Credit : X

காங்கிரஸில் சீர்திருத்தம் வேண்டும்

தமிழ்நாடு வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகய் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகபெரிய பின்னடைவாக அமையும். இந்த நாட்டை பாஜக நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார்.

ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும், வெளிப்படைத் தனமையோடும்.கட்சி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
அரசியல்
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay : கோட் சூட்டில் இருந்து பட்டு வேட்டி சட்டைக்கு மாறிய முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
Recommended image2
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Recommended image3
Now Playing
புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
Related Stories
Recommended image1
TN Politics: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Recommended image2
TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved