MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?

TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?

TN Politics: முதல்வர் விஜய் பிரதமர் மோடியை சந்தித்தபோது விஜய்யின் தனிப்பட்ட ஆலோசகரும், ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் டெல்லி பயணத்தில் உடன் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : May 28 2026, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிரதமர் மோடியை சந்தித்த விஜய்
Image Credit : x

பிரதமர் மோடியை சந்தித்த விஜய்

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு நேற்று முதன்முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் மற்றும் தமிழக நிதி தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் விஜய் முன்வைத்தார். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய் சந்தித்து பேசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
டெல்லி பயணத்தில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்
Image Credit : Asianet News

டெல்லி பயணத்தில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்

இந்த நிலையில், விஜய் பிரதமர் மோடியை சந்தித்தபோது விஜய்யின் தனிப்பட்ட ஆலோசகரும், ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவரும் டெல்லி பயணத்தில் தோன்றியதாக சில ஆங்கில மற்றும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சந்திக்கும் போது கடுமையான அரசு நெறிமுறைகளும் பாதுகாப்பும் பின்பற்றப்படும். பிரதமர் - முதல்வர் சந்திப்பின் போது ஜோதிடர் ராதன் பண்டிட் உடன் இருக்கவில்லை என்பதே உண்மையாகும். விஜய் முதல்வரான பிறகு ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன.

Related Articles

Related image1
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Related image2
TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
33
அரசு பதவி வழங்கிய விஜய்
Image Credit : CM Vijay FB

அரசு பதவி வழங்கிய விஜய்

அதாவது சில நாட்களுக்கு முன்பு ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் த‌மிழக முதல்வரின் (அரசியல்) சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டார். ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தவெக தேர்தல் வெற்றியை துல்லியமாக கணித்தவர் என ஊடகங்களில் பேசப்பட்டது. நீண்ட நாட்களாக தன்னுடன் இருக்கும் அவருக்கு விஜய் அரசு பதவி வழங்கினார்.

கடும் எதிர்ப்பால் வாபஸ்

ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்க்கு இடதுசாரிகள், விசிகவை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ''முதல்வர் விஜய்க்கு ஜோதிடத்தில் மீது நம்பிக்கை இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் அரசு பதவிகளில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஜோதிடரை எப்படி நியமிக்கலாம்'' என அவர்கள் விஜய்க்கு கேள்விகளை எழுப்பினர். மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன.

பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்த கடும் கண்டனத்தால் நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் இதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை. விஜய் எனது மகன் போன்றவர் என்று கூறினார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG New Rules 2026: இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடையாது.! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! LPG சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு.!
Recommended image2
Now Playing
TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
Recommended image3
Now Playing
TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
Related Stories
Recommended image1
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Recommended image2
TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved