ரொம்ப கம்மி வட்டியில் 20 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன்; தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு
Low interest Loans: சிறு வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. சிறு வணிக கடன் திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் வரையும், கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரையும், தனிநபர் கடனாக ரூ.20 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
LOAN TAMILNADU
கடன் உதவி திட்டங்கள்
திருமணம், மருத்துவ செலவு, புதிய வீடு கட்ட, சொந்த தொழில் செய்ய என பல வகைகளிலும் மக்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அந்த வகையில் பணம் இல்லாத நபர்கள் அதிக வட்டிக்கு கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உருவாகும். இதனால் மொத்த சம்பளமும் வட்டி கட்டியே வாழ் நாள் முழுவதும் நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் தவித்த மக்களுக்கு கம்மி வட்டியில் கடன் உதவியானது வழங்கப்படுகிறது. தினந்தோறும் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Loan Assistance Scheme
தனி நபர் முதல் சிறு, குறு நிறுவன கடன் உதவி
நபர் ஒருவருக்கு 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சிறு வணிக வியாபாரிகள் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அடுத்ததாக சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு, உற்பத்தி நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியான 7 சதவீத விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்திற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
Small Business Loan
கூட்டுறவு பணியாளர்களுக்கு கடன்
இதே போல ரெம்ப கம்மி வட்டியில் 20 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர் சங்கங்களாலும்,
Business Loan
15 லட்சம் டூ 20 லட்சம்
பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கப்பட்டு வந்தது. இதன் கடன் வழங்கும் நிதியை அதிகரிக்க வேண்டும் என உறுப்பினர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
BANK LOAN
நிபந்தனைகள் என்ன.?
இதன் படி தனி நபர் கடன் பெறும் உறுப்பினர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்குட்பட்டு இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் பெறும் உறுப்பினர்களின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அதிகபட்சக் கடன் அளவு ரூ.20 லட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்பட வேண்டும் என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Education Loan
எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும்
மேலும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5% பங்குத் தொகையாக வசூலிக்கப்பட வேண்டும். மேலும் பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து கடன் தவனை தொகை உள்ளிட்ட அனைத்து பிடித்தங்களும் செய்யப்பட்டு அவருடைய மொத்த ஊதியத்தில் 25%-க்குக் குறைவாக இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.