மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்..! திருமண விழாவில் சர்ப்ரைஸ்..!
இன்று முதல்வர் ஸ்டாலினின் மனைவி திர்கா ஸ்டாலினுக்கு 63வது பிறந்தநாள்..
இந்திய இசை உலகில் மாபெரும் மேதைகளில் ஒருவரும், கலைஞர் கருணாநிதியின் உறவினருமான நாதஸ்வர கலைஞர் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கொள்ளுப் பேரனுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. சென்னையில் இந்த திருமனம் முதலமைச்சர் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
ஸ்டாலின் இல்ல திருமண விழா என்பதால் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமகன் கருணாரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாமனார் ஜெயராமனின் பேரன் ஆவ
durga stalin
இந்த விழா மற்றொரு விதத்தில் ஸ்பெஷலாக இருந்தது. காரனம் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். தனது 63வது வயதில் இன்று அவர் அடியெடுத்து வைத்துள்ளார்.
திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய அனைவருமே துர்கா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறினர். இதில் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார்.
ஸ்டாலின் துர்கா எவ்வர் கிரீன்..!
”முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்ற பிறகு என்னை அவர் கேட்டுவிடக்கூடாது” என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் கூறியது இன்னும் ருசிகர
durga stalin
”வீட்டுக்குப் போனதும், எல்லோரும் மேடையில் பேசும் போது வாழ்த்து சொன்னார்களே.. நீங்கள் சொல்லவில்லையே? என்று மனைவி கேட்பார்களே என்று பயந்து இதை நான் சொல்லவில்லை”என்று ஸ்டாலின் பேசியபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது
durga stalin
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, ஸ்டாலின் - துர்கா இணையரின் திருமணம் நடைபெற்றது. அன்றுமுதல் இன்று வரை துர்கா ஸ்டாலின் பெரும் திராவிட அரசியல் குடும்ப மருமஅலாக லைம்லைட்டிலேயே உள்ளார். அவர் தன் குடும்ப நலன்களுக்காக கோவில்களுக்கு செல்வது, அதற்கு இறை மறுப்பாளரான ஸ்டாலின் எந்த தடையும் சொல்லாமல் ஏற்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அவர்களை எவர்கிரீன் தம்பதிகளாக வைத்துள்ளது. முதன்முதலில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர்விட்டு அழுதது, தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது
durga stalin
இன்று 63வது வயதில் அடியெடுத்து வைக்கும் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு ஏஷியாநெட் தமிழ் சார்பிலும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!