- Home
- Tamil Nadu News
- காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வழக்கு! தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்!
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வழக்கு! தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்!
சீனர்களுக்கு விசா பெற்று தந்ததில் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வழக்கு! தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்!
பஞ்சாப் மாநிலத்தில் TSPL நிறுவனத்தின் அனல் மின்நிலைய திட்டப் பணிகளை மேற்கொள்ள சீன நிறுவனமான ஷாங்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
கார்த்தி சிதம்பரம்
இத்திட்டம் தொடர்பாக சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு சிலருக்கு எதிராக சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்தது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை
இதனையடுத்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் பல முறை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
இந்நிலையில் தனக்கு எதிராக குற்ற வழக்கு தொடர அனுமதி பெறவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 5ம் தேதி வழங்கப்படும் என கூறி நீதிபதி தெரிவித்தார்.
ப.சிதம்பரம்
2011-ம் ஆண்டு அவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, சீன தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக இந்த வழக்குப்பதிவு
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.