- Home
- Tamil Nadu News
- இவ்வளவு தள்ளுபடி விலையில் மருந்துகளா.? அசத்தும் தமிழக அரசின் திட்டம்- வெளியான சூப்பர் அறிவிப்பு
இவ்வளவு தள்ளுபடி விலையில் மருந்துகளா.? அசத்தும் தமிழக அரசின் திட்டம்- வெளியான சூப்பர் அறிவிப்பு
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திட்டம் நாளை தொடங்குகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25% தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படும்.

இவ்வளவு தள்ளுபடி விலையில் மருந்துகளா.? அசத்தும் தமிழக அரசின் திட்டம்
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம். தமிழ்ப்புதல்வன் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம். கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். இல்லம் தேடி கல்வி என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்ப புதுப்புது நோய்களுக்கும் அதிகரிக்கிறது.
1,000 முதல்வர் மருந்தகங்கள்
இதனால் சம்பளத்தில் ஒரு தொகையை மருத்துவருக்கும், மருந்துகளுக்கும் ஒதுக்கும் நிலை உள்ளது. இதனால் மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் மருந்துகளுக்கு என பட்ஜெட் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
அதன் அடிப்படையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில், அதனை தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள்,
3 லட்சம் மானிய தொகை
மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் அறிவரையை வழங்கியது. மேலும் முதல்வர் மருந்தகம் தொடங்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. இறுதிக்கட்ட மானியமாக ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்பட்டது. மேலும், தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைக்க கூடுதல் நிதி தேவைப்பட்டால், கூட்டுறவு வங்கிகள், டாபெட்கோ, தாட்கோ, டாம்கோ மூலம் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
25 % தள்ளுபடியில் மருந்துகள்
இந்த நிலையில் முதல்வர் மருந்தகம் திட்டமானது நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு பாண்டி பஜாரில் முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்ட பிறகு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த முதல்வர் மருந்தகத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படவுள்ளது.