MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எதிர்பாராத நேரத்தில் குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்.! நிதி உதவி அதிகரிப்பு-வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்பாராத நேரத்தில் குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்.! நிதி உதவி அதிகரிப்பு-வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், படகுகளுக்கான நிவாரணத் தொகை உயர்வு மற்றும் மீனவர் குடும்பங்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண குழு அமைக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 04 2025, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில்  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் 28.02.2025 அன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

26
மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் நேற்று  (03.03.2025) நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதியில் உள்ள மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். கடந்த 18.02.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடனான சந்திப்பின் அடிப்படையில்,

 

36
இலங்கை சிறையில் மீனவர்கள்

இலங்கை சிறையில் மீனவர்கள்

அம்மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளான தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடித்துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துக்கல் மீன் இறங்கு தளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய திட்ட செயல்பாட்டிற்கு ரூ.360 கோடியினை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்கள்.  இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து,

46
மீனவர்களுக்கு நிவாரண தொகை உயர்வு

மீனவர்களுக்கு நிவாரண தொகை உயர்வு

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை ரூ.6 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்தி வழங்க  முதலமைச்சர்ஆணையிட்டுள்ளார்கள். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவி தொகையாக தற்போது நாளொன்றுக்கு 350 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில்,

56
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட தின உதவித் தொகையினை நாளொன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் நடைபெறுவதுடன் அவர்கள் மீது சிறைதண்டனை விதிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களை  உடனுக்குடன் விடுவிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்டு தாயகம் கொண்டு வருவதை துரிதப்படுத்திடும் பொருட்டு,

66
மத்திய அமைச்சரை சந்திக்க நடவடிக்கை

மத்திய அமைச்சரை சந்திக்க நடவடிக்கை

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர், அலுவல்சாரா உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரநிதிகள் அடங்கியகுழு, விரைவில்  ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved