இது தான் லாஸ்ட்.! அமைச்சர்களுக்கு எச்சரிக்கை.? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Chief Minister Stalin is dissatisfied : தமிழக அரசு மக்களுக்கு தேவையான பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, விடியல் பயண திட்டம், விவசாயிகள் மற்றும் மகளிர்களுக்கான திட்டங்கள் என ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இருந்த போதும் திமுக அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சனை முன்னிலையில் உள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனால் எதிர்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
Law and Order
அமைச்சர்களும் சர்ச்சை கருத்தும்
இது ஒரு பக்கம் என்றால் அமைச்சர்களின் செயல்பாடும் முதலமைச்சர் ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள் மீதான விமர்சனம் அடிக்கடி வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பேருந்து பயணத்தை ஓசி டிக்கெட், ஆதிதிராவிட அதிகாரியை ஜாதி பெயரை கூறி அழைத்து போன்ற சர்ச்சையில் சிக்கினார். அடுத்ததாக வைணவ சமயங்களின் குறியீடுகளை தவறாக ஒப்பீட்டு பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
DMK Ministers
அதிருப்தியில் முதல்வர் ஸ்டாலின்
இதனையடுத்து பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதே போல திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனும் வட மாநிலத்தவர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதனால் திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கப்பட்டது.
எதிர்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து அமைச்சர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் அரசு சார்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதியாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தலை வழங்கினார்.
Cabinet Reshuffle
அமைச்சர்களுக்கு எச்சரிக்கை
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் இருக்கக் கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இனியும் தொடர்ந்தால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் என எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் துறை ரீதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்