- Home
- Tamil Nadu News
- சென்னை முதல் வேலூர் வரை இன்று தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
சென்னை முதல் வேலூர் வரை இன்று தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
Tamilnadu weatherman: தமிழகத்தில் வெப்பம் தணிந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tamilnadu weather update
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். எப்போது மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து கிடந்த நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
tamilnadu heavy Rain
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று எந்ததெந்த மாவட்டங்களில் மிக கனமழை! தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
tamilnadu weatherman
அதன்படி பல்வேறு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் நாகை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை முதல் வேலூர் வரை உள்ள பகுதிகளில் பிற்பகலில் இருந்து இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamilnadu weatherman pradeep john
இதுதொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மழை மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் வெப்பநிலை கணிசமாகக் குறையும். அதேநேரம், தென் தமிழகம் மற்றும் டெல்டா பெல்ட்டின் சில பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காங்சிபுரம் சுற்றுவட்டாரத்தை பொறுத்தவரை இன்று ஓரளவு மழை பெய்யும். சென்னை முதல் வேலூர் வரை உள்ள பகுதிகளில் பிற்பகலில் இருந்து இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகையால் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
Heavy Rain Alert
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குற்றாலத்திலும் நல்ல மழையால் அருவிகளில் நீர் பெருக்கெடுக்கலாம். மேலும் கொங்கு மண்டலத்தின் பிற உள் பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளார்.