- Home
- Tamil Nadu News
- சென்னையில் அதிர்ச்சி.. பாரில் ஏற்பட்ட தகராறு..18 வயது பெண்ண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
சென்னையில் அதிர்ச்சி.. பாரில் ஏற்பட்ட தகராறு..18 வயது பெண்ண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
Chennai Road Rage : சென்னையில் ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பரபரப்பு
சென்னையில் ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட வாய்த்தகராறு சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன நிகழ்ச்சியின்போது இரண்டு இளைஞர் குழுக்களுக்குள் மோதல், பின்னர் சாலையில் நடந்த ரோடு தாக்குதலாக மாறி 18 வயது இளம்பெண்ணின் உயிரை பறித்துள்ளது. போலீஸ் தகவலின்படி, உயிரிழந்த யான்சி (18) இலங்கை அகதி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பார் தகராறு
அவர் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இரவு, யான்சி தனது நண்பர்களுடன் சென்னை நகரிலுள்ள ஒரு தனியார் பாரில் இருந்துள்ளார். அப்போது மற்றொரு குழுவுடன் வாய்த்தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாருக்குள் ஏற்பட்ட பதற்றத்தை பவுன்சர்கள் சமரசப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை போலீஸ்
ஆனால் வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே கோபம் அடங்கவில்லை என்றும், பாதுகாப்பு ஊழியர்கள் இரு குழுக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிய பின்னரும் பதற்றம் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், யான்சி மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர் தரப்பினர் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கார் மீது கற்கள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார் குழுவினர், இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்று மோதி தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
கார் மோதி பெண் பலி
இந்த மோதலில் யான்சி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது தோழி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக பாலமுருகன், ஜோஷ்வா மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

