MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Best Profession for Zodiac Signs : எந்த ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்? ஜோதிடம் சொல்வது இதுதான்

Best Profession for Zodiac Signs : எந்த ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்? ஜோதிடம் சொல்வது இதுதான்

Best Profession for Zodiac Signs : ஜோதிடத்தின் படி, ஒருவரின் ராசி மற்றும் கிரக நிலைகள் தொழில் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற தொழில்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 01 2026, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராசிப்படி தொழில்
Image Credit : Asianet News

ராசிப்படி தொழில்

சொந்த தொழில் தொடங்கி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் ஒரே அளவில் உழைத்தாலும், சிலர் விரைவில் வளர்ச்சி அடைகிறார்கள். சிலர் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண முடியாமல் தவிக்கிறார்கள். ஜோதிட நம்பிக்கைகளின் படி, இதற்கு ஒருவரின் ராசி மற்றும் அந்த ராசியை ஆளும் கிரகங்களின் தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, மனநிலை, எடுக்கும் திறன், தொடர்பு திறன் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை ராசிகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன என்பதே ஜோதிட நிபுணர்களின் கருத்தாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நெருப்பு தத்துவ ராசிகள்
Image Credit : Asianet News

நெருப்பு தத்துவ ராசிகள்

நெருப்பு தத்துவ ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் தைரியம் மற்றும் தலைமைத்துவ குணங்களால் தனித்துவம் பெறுவார்கள். புதிய முயற்சிகளில் அச்சமின்றி இறங்கும் இவர்களுக்கு ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல், உணவகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான தொழில்கள் ஏற்றதாக கருதப்படுகின்றன. குறிப்பாக, புதுமையான யோசனைகளை செயல்படுத்தும் திறன் இவர்களுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

35
பூமி தத்துவ ராசிகள்
Image Credit : Asianet News

பூமி தத்துவ ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம் போன்ற பூமி தத்துவ ராசிக்காரர்கள் நிலையான சிந்தனையுடன் செயல்படுவார்கள். நீண்டகால திட்டமிடல் மற்றும் பணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் இவர்களின் பலமாக பார்க்கப்படுகிறது. அதனால் விவசாயம், நிதி நிறுவனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரம், மளிகை மற்றும் மொத்த விற்பனைத் துறைகள் இவர்களுக்கு சாதகமாக அமையும் என ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

45
காற்று தத்துவ ராசிகள்
Image Credit : Asianet News

காற்று தத்துவ ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று தத்துவ ராசிக்காரர்கள் தொடர்புத்திறன் மற்றும் படைப்பாற்றலில் முன்னிலையில் இருப்பார்கள். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மீடியா, கன்சல்டன்சி, டிராவல் சேவைகள், ஃபேஷன் மற்றும் ஆடை வணிகங்களில் இவர்களுக்கு வேகமான வளர்ச்சி கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் திறன் இவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

55
நீர் தத்துவ ராசிகள்
Image Credit : Asianet News

நீர் தத்துவ ராசிகள்

கடகம், விருச்சிகம், மீனம் போன்ற நீர் தத்துவ ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமாகவும் புதுமை சிந்தனையுடனும் இருப்பார்கள். மினரல் வாட்டர், பால் பொருட்கள், மருந்து, இரசாயனம், ஏற்றுமதி-இறக்குமதி, கலை மற்றும் டிசைனிங் துறைகள் இவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றன. இருப்பினும், ராசி மட்டுமே வெற்றியை தீர்மானிக்காது என்றும், கடின உழைப்பு, திட்டமிடல், தன்னம்பிக்கை மற்றும் சரியான முடிவுகளே தொழிலில் உண்மையான வெற்றியைத் தரும் என்றும் ஜோதிட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
வேலைவாய்ப்பு
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: குரு பகவான் ஆசியால் ராஜயோகம் பெறும் 4 ராசிகள்.. இனி பணமழை தான்!
Recommended image2
Maha Bhagya Yoga: பெண்களுக்கு மகா பாக்கிய யோகம்.. சுக்கிரன் பெயர்ச்சியால் பலன் பெறும் 6 ராசிகள்!
Recommended image3
Today Rasi Palan: இன்றைய ராசிபலன்..ஐப்பசி பௌர்ணமி நாளில் பணவரவு, பதவி உயர்வு யாருக்கு? 12 ராசிகளின் பலன்கள்!
Related Stories
Recommended image1
Guru Transit 2026: குரு பெயர்ச்சி 2026: லட்சுமி கடாட்சம் கிடைக்கும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: காதல் திருமணத்தில் 100% வெற்றி பெறும் 5 ராசிக்காரர்கள்! உங்க ராசி இதுல இருக்கா பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved