- Home
- Tamil Nadu News
- வார இறுதி நாள் அதுவுமா அதிர்ச்சி.. சென்னையில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை!
வார இறுதி நாள் அதுவுமா அதிர்ச்சி.. சென்னையில் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை!
சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜனவரி 24 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த மின்தடையால் மாதவரம் மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உள்ள பல இடங்கள் பாதிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள்
தலைநகர் சென்னையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது, மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
மின்சார வாரியம்
இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி ஜனவரி 24 சனிக்கிழமை கிழமையான இன்றைய தினம் சென்னையில் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாதவரம்
தேவி நகர், ஆவின் எம்எம்சி, வெங்கடேஸ்வரா நகர் 10வது மற்றும் 11வது தெரு, அருள் நகர் 1வது தெரு முதல் 5வது தெரு, பேங்க் காலனி 1 முதல் 5வது தெரு, கணபதி தெரு 1 முதல் 5வது தெரு, ஜான் வாசு தெரு, சரோஜினி நகர், வி.எஸ்.மணி நகர், ஜெயலட்சுமி கார்டன், மாடசாமி நகர், மாரி தெரு, பின்னி பாரதி தெரு, பின்னி பாரதி தெரு, நெய்தா பாரதி தெரு, பின்னி. VOC தெரு, அறிஞர் அண்ணா நகர், மூலச்சத்திரம் மெயின் ரோடு, VNG நகர், ஈஸ்வரிய நகர், பெருமாள் கோயில் தெரு, துரை கண்ணு தெரு, அய்யனார் தெரு, வரதன் நகர், துரை அம்மாள் நகர், மூர்த்தி கார்டன், சுபம் நகர், பார்வதி நகர்.
குன்றத்தூர்
பல்லாவரம் மெயின் ரோடு, மணிகண்டன் நகர், மெட்ரோ ஸ்டார் சிட்டி, மெட்ரோ ஹைடெக் சிட்டி, விஷால் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

