MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சனிக்கிழமை ரெடியா இருங்க மக்களே! ரேஷன் கார்டு பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு!

சனிக்கிழமை ரெடியா இருங்க மக்களே! ரேஷன் கார்டு பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை எளிதாக மேற்கொள்ள ஒவ்வொரு மாதமும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 23 2026, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரேஷன் கார்டு
Image Credit : our own

ரேஷன் கார்டு

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் 2.23 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை போன்ற பல சலுகைகள் கிடைக்க ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரேஷன் கார்டு பெயர் சேர்க்க திருத்தம் செய்ய முகாம்
Image Credit : Google

ரேஷன் கார்டு பெயர் சேர்க்க திருத்தம் செய்ய முகாம்

இந்நிலையில் ரேஷன் கார்டுக்கு தினமும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த சூழலில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டுகளில் பெயர்களை மாற்றம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், பெயர்களை சேர்க்க திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை (டிசம்பர் 24) அதாவது நாளை நடைபெறவுள்ளது.

35
உணவு பொருள் வழங்கல் துறை
Image Credit : our own

உணவு பொருள் வழங்கல் துறை

இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 24.01.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

45
கைபேசி எண் பதிவு மாற்றம்
Image Credit : our own

கைபேசி எண் பதிவு மாற்றம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

55
சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள்
Image Credit : our own

சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள்

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Related Stories
Recommended image1
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. எப்போது தெரியுமா?
Recommended image2
லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. 4 நாள் தான் டிரைனிங்! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved