திருச்சி, சேலம் உள்பட 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Heavy Rain
சென்னை வானிலை மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலன இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதனமான மழை பெய்யக் கூடும். அதன்படி இன்று ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 13 மாட்டங்களில் மினமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
Northeast Mansoon
மேலும் செவ்வாய் கிழமை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை என 16 மாட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 23ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய 4 மாட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rains
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய் கிழமை காலை தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது வலுவடைந்து 23ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உ்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா - மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு இடையே 24ம் தேதி கரையை கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.