- Home
- Tamil Nadu News
- சென்னையன்ஸ் ரெடியா? புத்தக கண்காட்சி தொடக்கம்.. டிக்கெட் ப்ரீ.. இவ்வளவு தள்ளுபடியா? முழு விவரம்!
சென்னையன்ஸ் ரெடியா? புத்தக கண்காட்சி தொடக்கம்.. டிக்கெட் ப்ரீ.. இவ்வளவு தள்ளுபடியா? முழு விவரம்!
Chennai Book Fair 2026: சென்னையில் புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. புத்தகங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? தினமும் எத்தனை மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்? என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.

சென்னை புத்தக கண்காட்சி
சென்னையில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 49வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று (ஜனவரி 8) முதல் தொடங்கியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) (BAPASI) நடத்தும் இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெற உள்ளன.
அனுமதி இலவசம்
வழக்கமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு அனுமதி இலவசம் என பபாசி அறிவித்துள்ளது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
1,000 அரங்குகள்
சென்னை புத்தக கண்காட்சியில் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகங்கள், பென்குயின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களின் பதிப்பகங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
புத்தகங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?
சென்னை புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களையும் 10% தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் சில பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களுக்கு 30% வரை தள்ளுபடி வழங்க உள்ளதால் குறைந்த விலையில் பிடித்தமான புத்தகங்களை வாங்கிக் கொள்ள முடியும்.
சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு இலவச மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

