MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டோட்டலாக மாறும் மெரினா.. இனி இஷ்டத்துக்கு கடை போட முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வியாபாரிகள் ஷாக்!

டோட்டலாக மாறும் மெரினா.. இனி இஷ்டத்துக்கு கடை போட முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வியாபாரிகள் ஷாக்!

மெரினாவில் புற்றீசல் போல் வித விதமான கடைகள் பல்கி பெருகி விட்டன. மக்கள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதைகள், மணற்பரப்புகள் என எங்கிலும் கடைகள் ஆக்கிரமித்து விட்டதால் சாலைகளில் செல்லும்போது கடல் அன்னையின் அழகை ரசிக்க முடியவில்லை.

1 Min read
Author : Rayar A
Published : Jan 08 2026, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
உலகப்புகழ்பெற்ற மெரினா கடற்கரை
Image Credit : our own

உலகப்புகழ்பெற்ற மெரினா கடற்கரை

தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்றதாகும். சுமார் 13 கிமீ நீளம் கொண்ட கடற்கரை ஆசியாவின் இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமை கொண்டது. மெரினா கடற்கரையில் தான் தமிழகத்தை ஆட்சி புரிந்த பேரஞர் அண்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. இதனால் சென்னை மக்களின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாக மாறி விட்ட மெரினாவுக்கு தினமும் ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மெரினாவை ஆக்கிரமித்த கடைகள்
Image Credit : our own

மெரினாவை ஆக்கிரமித்த கடைகள்

இத்தகைய சிறப்புமிக்க மெரினாவில் புற்றிசல் போல் வித விதமான கடைகள் பல்கி பெருகி விட்டன. மக்கள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதைகள், மணற்பரப்புகள் என எங்கிலும் கடைகள் ஆக்கிரமித்து விட்டன. எங்கும் கடைகள் நிறைந்து விட்டதால் சாலைகளில் செல்லும்போது கடல் அன்னையின் அழகை ரசிக்க முடியவில்லை. 

மெரினா கடற்கரையைச் சர்வதேச தரத்திற்கு மாற்றும் நோக்கில், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடைகளை முறைப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.

மெரினா ஷாப்பிங் மால் அல்ல‌

சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், 'மெரினா கடற்கரை ஷாப்பிங் மாலோ, பஜாரோ அல்ல. அது மக்கள் பொழுதுபோக்கும் இளைப்பாறுவதற்கான இடம். இனி மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி'' என்று அதிரடியாக உத்தரவிட்டது.

33
மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி
Image Credit : ANI

மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் இனிமேல் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 'மெரினாவில் இப்போது 1,417 கடைகள் உள்ளன. 

இந்த அனைத்து கடைகளையும் நீக்கி விட்டு குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். 100 பொம்மை கடைகள், 100 பேன்சி கடைகள், 100 உணவகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்' என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மெரினா கடற்கரை
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
Recommended image2
Now Playing
ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
Recommended image3
Now Playing
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
Related Stories
Recommended image1
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!
Recommended image2
நாம் தமிழர் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால் மெரினா கடற்கரையில் சுடுகாடு இருக்காது.! சீமான் அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved