குடையை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க.! இன்று 100 % மழை உறுதி - வெதர்மேன் வெளியிட்ட அலர்ட் ரிப்போர்ட்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Rains
தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
Rain
தென் மாவட்டங்களில் கன மழை
இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
Rainy Season
தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள மழைக்கான அலர்ட் பதிவில், இன்று காலை முதல் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம்-தூத்துக்குடி-கன்னியாகுமாரி கடற்கரை பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை முதல் மழை வரும் என கூறியுள்ளார்.
Tamil nadu rains
சென்னையில் இன்று முதல் கன மழை
மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய சுழற்சியானது சென்னை, பாண்டி, கடலூர், ராமேஸ்வரம் ஆகிய கடலோர மாவட்டங்கள் அடுத்த இரண்டு நாட்கள் நீடிக்கும். தென் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்யும், அடுத்த 2 நாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பாண்டி, கடலூர் பகுதிகளில் மழை பெய்யும், இதே போல காரைக்கால், நாகை போன்ற இடங்களிலும் மழை பெய்யும்,
rain
வெள்ளிக்கிழமை முதல் கன மழை
இந்த மழையானது வெள்ளிக்கிழமை முதல் ராமநாதபுரம் கடலோர பகுதிகளுக்கு மாறும் என தெரிவித்துள்ளார். இந்த மழையானது சில இடங்களில் கனமாக இருக்கும் மற்ற இடங்களில் மிதமான மழையாக இருக்கும். இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் குடை மற்றும் மழைக்கோட்டை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.