- Home
- Tamil Nadu News
- அட்டகாசமான உள்கட்டமைப்புடன் சென்னை ஏர்போர்ட் புதிய முனையம்.. இங்க அப்படி என்ன ஸ்பெஷல்..
அட்டகாசமான உள்கட்டமைப்புடன் சென்னை ஏர்போர்ட் புதிய முனையம்.. இங்க அப்படி என்ன ஸ்பெஷல்..
chennai airport: ஜொலிக்கும் விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகளும், புகைப்படங்களும் ஒரு தொகுப்பு...

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் (NITB) பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், பயணிகளுக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அப்படி இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது எனக் கேட்கத் தோன்றுகிறதா? வாங்க பதிவுக்குள் போகலாம்.
சென்னை விமான நிலையத்தின் கட்டிட வடிவமைப்பு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்களில் ஸ்கைலைட் (skylight) கண்களை பறிக்கும் வகையில் தங்கம் போல மின்னின. குறைவான ஆற்றல் நுகர்வில் அதிகமான ஒளியை வெளியிட்டு விமான நிலையத்தை வெளிச்சத்தில் மூழ்கடித்துள்ளது. காற்றோட்டமாக இருக்க வேண்டும் என இந்த ஸ்கைலைட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சூரிய ஒளி சக்தியை முறையாக உபயோகிக்கும் நோக்கில் சூரிய மின்சேமிப்பு அமைப்பும் (solar system) இந்தப் புதிய முனையத்தில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி புதிய முனையத்தில் துருப்பிடிக்காத எஃகு வைத்து கட்டப்பட்ட பிரமாண்ட தூண்கள் இருக்கின்றன. அதில் தங்க நிற பூச்சு செய்யப்பட்டிருப்பது கவனம் ஈர்க்கிறது.
இந்த புதிய முனையத்தில் சுமார் 140 செக் இன் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 100 மட்டுமே முதல்கட்ட பயன்பாட்டுக்கு வருகிறது. மீதமுள்ளவை 2ஆம் கட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது. சென்னை ஏர்போர்ட்டில் ஜூலை 2025ஆம் ஆண்டுக்குள் விரிவாக்க பணிகள் நிறைவடைந்து, அதிக சர்வதேச விமானங்களைக் கையாளும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் பயணிகளின் நெரிசலை குறைக்க முடியும். அதாவது ஒரு ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை சமாளிக்க முடியும் என்கிறார்கள்.
இதையும் படிங்க: தர்பூசணியை இந்த 1 பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால்... ரெண்டு மடங்கு நன்மை கிடைக்கும்.. நிபுணர் சொல்றத கேளுங்க!!
இந்த புதிய முனையம் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) முன்னெடுத்துள்ள பெரிய திட்டமாகும். இதற்கு ரூ.2,467 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தின் மேற்கூரை அலை மாதிரியான வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனக் கலையான பரத நாட்டியத்தின் அசைவுகளையும், அதன் நுழைவு வாயில் கோயில் கோபுரத்தின் வடிவமைப்பையும் முன்னுதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உடைந்த கண்ணாடி.. உப்பு..! துரதிர்ஷ்டம் நீங்கி, வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரம்..!