MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உடைந்த கண்ணாடி.. உப்பு..! துரதிர்ஷ்டம் நீங்கி, வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரம்..!

உடைந்த கண்ணாடி.. உப்பு..! துரதிர்ஷ்டம் நீங்கி, வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரம்..!

vastu tips in tamil: நமக்கு வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால், எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்காது. துரதிர்ஷ்டம் வராமல் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
Published : Mar 27 2023, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விதியைத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனாலும் எல்லாவற்றையும் விதியுடன் இணைக்க முடியாது. சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகளும், நம்மைச் சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் தான் நமக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றலைத் தடுக்க பின்வரும் பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

உடைந்த கண்ணாடிகளை தூக்கி எறியுங்கள் 

வாஸ்து பார்வையில், உங்கள் உடல் தோற்றம், உங்கள் செயல்கள், எண்ணங்கள், கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் திறனை கண்ணாடி கொண்டுள்ளது. ஆகவே கண்ணாடி உடைந்தால், நம் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் உடைந்து விடும் என நம்பப்படுகிறது. வீட்டில்/ அலுவலகத்தில் கண்ணாடி உடைந்தால் அது மிகவும் மோசமானது. உங்களுக்கு வரும் துரதிர்ஷ்டத்தைத் தடுக்க உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி சில்லுகளை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். 

36

உப்பு பரிகாரம் 

உப்பின் ஆற்றல் பற்றி எல்லோருக்கும் தெரியும். இதனை வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் ஆன்மீக சக்தி உள்ளது தெரியுமா? வீட்டில் சரியாக உப்பை வைக்காவிட்டால் குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும். துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபட முதலில் உப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். வாஸ்துவில் உப்பின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது வீட்டின் எதிர்மறை சக்தியை நீக்குகிறது. எப்போதும் வீட்டில் சுத்தம் செய்யும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு துடைக்கவும். இன்னொரு விஷயம் என்னவெனில், வீட்டின் எல்லா மூலைகளிலும் உப்புக் கிண்ணங்களை வைப்பது. இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை உப்பு பயன்படுத்த வேண்டாம்.  

46

தூபங்கள் 

வீட்டில் ஊதுவத்தி ஏற்றுவது சாம்பிராணி தூபம் காட்டுவது பாரம்பரிய வழக்கம். இது இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினராலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் தூபம் அல்லது வாசனை மெழுகுவர்த்திகளை வைப்பதன் நன்மைகள் ஏராளம். இது நீங்கள் வேலை செய்யும் அல்லது வசிக்கும் இடத்திலிருந்து எதிர்மறை அதிர்வுகளை நீக்குகிறது.

56

நல்ல செயல்கள்..! 

அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதில் நல்ல செயல்களை போல சிறந்தது எதுவுமில்லை. ஏனெனில் சனி நமது கர்மங்களின் அடிப்படையில் பலன்களை தருகிறார். சனியின் தோஷம் விலக, நல்ல செயல்களை செய்யுங்கள். ஏழைகளுக்கு தானம், ஆதரவற்றவர்களுக்கு ஏதேனும் உதவிகளை செய்யுங்கள். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பசியாற்ற உணவு கொடுங்கள். அதிர்ஷடம் வரும். 

இதையும் படிங்க: உலக பணக்காரர் அம்பானிக்கு மனைவி என்றால் சும்மாவா..! நீதா அம்பானி அணியும் புடவைகளின் விலை தெரியுமா?

66

கற்பூரம் 

கற்பூரம் பொதுவாக கோயில்களிலும் வீடுகளிலும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் கிரகங்களை சமாதானப்படுத்த இது உதவுகிறது. உங்கள் வீட்டில் அல்லது அறையில் கற்பூரத்தை வைப்பதால் அந்த இடத்திலிருந்து வாஸ்து தோஷம் உடனே நீங்கும். ரோஜாவில் கற்பூரத்தை எரித்து துர்கா தேவிக்கு சமர்ப்பணம் செய்தால் பணமும், அபரிமிதமான செழிப்பும் கிடைக்கும். ஆனால் இதை 43 நாட்கள் தொடர்ந்து தவறாமல் செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: தர்பூசணியை இந்த 1 பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால்... ரெண்டு மடங்கு நன்மை கிடைக்கும்.. நிபுணர் சொல்றத கேளுங்க!!

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved