MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செங்கல்பட்டு விபத்தில் உயிரிழந்த 6 பேரில் 2 பேர் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள்! அதிர்ச்சி போட்டோஸ்.!

செங்கல்பட்டு விபத்தில் உயிரிழந்த 6 பேரில் 2 பேர் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள்! அதிர்ச்சி போட்டோஸ்.!

செங்கல்பட்டில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 பேரில்  2 பேர் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 11 2023, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்லவும் காத்திருந்தனர். அப்போது அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி  சாலையை கடக்க முயன்ற மூன்று இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி அருகில் இருந்த சிக்னல் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது.

24

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 6 பேரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

34

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44

மேலும் விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 6 பேரில் 2 பேர் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாமாண்டு மாணவர் ஜஸ்வந்த் (20) இருவரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
Recommended image2
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image3
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved