MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு குட்நியூஸ்.! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு

சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு குட்நியூஸ்.! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் ChatGPT பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகத்தை எளிதாக்கவும், செலவுகளை குறைக்கவும் ChatGPT பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 06 2025, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதற்கு இணையாக வர்த்தகமும் மாறி வருகிறது. இந்த நிலையில் வணிகர்களுக்கு செலவுகளை குறைத்திட ChatGPT பெரும் அளவில் பயன் உள்ளதாக இன்றைய காலத்தில் உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொழில்முனைவோர்களுக்கு ChatGPT பயிற்சி

தொழில்முனைவோர்களுக்கு ChatGPT பயிற்சி

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு. ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது  வரும் 08.03.2025 தேதி நடைபெற உள்ளது.சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சை பிரதான சாலை, அரியமங்கலம், காமராஜ் நகர். திருச்சி மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

35
பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்

பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்

ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

தெளிவான இலக்கு நிர்ணயம்: ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும். செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள்.

மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்.

கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் Al கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

45
ChatGPT மூலம் தீர்வு

ChatGPT மூலம் தீர்வு

செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும். ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

நேரடி சிக்கல் தீர்வு: இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், ChatGPT மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கவும்.

பங்கேற்பாளர்கள் 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன் ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள்.
 

55
முன்பதிவு அவசியம்

முன்பதிவு அவசியம்

இப்பயிற்சி பற்றிய கூஊடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் नं: 9894920819/90806 09808/98416 93060- இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TASMAC: நவம்பர் 1 முதல் மதுபான விலை உயர்கிறதா? ரூ.10 கட்டணத்தில் புதிய மாற்றம் – முழு விவரம்!
Recommended image2
Thevar Guru Pooja : தேவர் குருபூஜை ஏன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது? வரலாறும், பின்னணியும்!
Recommended image3
Seeman : எலெக்‌ஷன் ரிசல்டால் ரஜினி ரொம்ப வருத்தப்பட்டார் - சூப்பர்ஸ்டாரை சிக்கலில் சிக்க வைத்த சீமான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved