MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! ஜனவரி 11ம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்! இதோ லிஸ்ட்!

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! ஜனவரி 11ம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்! இதோ லிஸ்ட்!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 7, 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 06 2025, 08:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Southern Railway

Southern Railway

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம்,  அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையால் பயணடைந்து வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Maintenance Work

Maintenance Work

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். இதுகுறித்து  முன்கூட்டியே ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படும். இந்நிலையில் திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

36
Train

Train

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: செங்கோட்டையில் இருந்து ஜனவரி 7, 8, 11ம் ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை புறப்பட்டு செல்லும் ரயில் (வ.எண்.16848), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 9ம் தேதி மும்பை செல்லும் ரயில் (வ.எண்.16352), குருவாயூரிலிருந்து ஜனவரி 8, 10ம் தேதிகளில் சென்னை செல்லும் ரயில் (வ.எண்.16128), கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 11ம் தேதி ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 7ம் தேதி மும்பை செல்லும் ரயில் (வ.எண்.16340), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 11ம் தேதி கச்சிகுடா செல்லும் ரயில் (வ.எண்.16354) ஆகிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

46
Train News

Train News

இந்த ரயில்கள் விருதுநகரில் இருந்து மதுரை ரயில் நிலையம் வருவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் (வ.எண்.16847) ஜனவரி 9, 11ம் தேதிகளிலும், கச்சிகுடாவில் இருந்து ஜனவரி 10ம் தேதி நாகர்கோவில் புறப்படும் ரயில் (வ.எண்.07435), பனாரசிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட தமிழ்ச்சங்கம் ரயில் (வ.எண்.16368) ஆகியவை திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

56
Train route changes

Train route changes

நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து ஜனவரி 7, 9, 11ம் தேதிகளில் புறப்பட வேண்டிய பகல் நேர ரயில்கள் (வ.எண்.16321 /16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

66
Alternative train operation

Alternative train operation

மதுரையில் இருந்து ஜனவரி 9ம் தேதி பிகானீர் புறப்படும் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) திண்டுக்கல் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குஜராத் ஒகாவில் இருந்து ஜனவரி 7ம் தேதி ராமேசுவரம் புறப்படும் ரயில் (வ.எண்.16734) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாகவும், கொல்லத்தில் இருந்து ஜனவரி 11ம் தேதி செகந்திராத் புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.07176) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் இயக்கப்படும். திருச்செந்தூர்-பாலக்காடு ரயில் (வ.எண்.16731/16732) ஜனவரி 9,11ம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தென்னக இரயில்வே
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image2
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Recommended image3
Now Playing
முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved