MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுது? இதோ குளு குளு அப்டேட்!

அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுது? இதோ குளு குளு அப்டேட்!

கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 22 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Weather Update

Tamilnadu Weather Update

TN Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதாவது கரூரில் 103.1 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் 102.3 டிகிரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 102.2 டிகிரி, ஈரோடு 101.8 டிகிரி, வேலூர் 101.4 டிகிரி, தர்மபுரி மற்றும் திருத்தணியில் 100.4 டிகிரி என 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Tamilnadu Rain

Tamilnadu Rain

தமிழகத்தில் வானிலை நிலவரம்

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த இடங்களில் பவர் கட் தெரியுமா?

34
Tamilnadu heatwave

Tamilnadu heatwave

அதிகபட்ச வெப்பநிலை

இன்று முதல் 25ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

இதையும் படிங்க: விடுமுறை தொடர்பாக மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்! குஷியில் அரசு ஊழியர்கள்!

44
Tamilnadu Rain alert

Tamilnadu Rain alert

அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு வானிலை அறிக்கை
தமிழ்நாடு மழை
கனமழை
மழை செய்திகள்
கோடைக்காலம்
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image2
Now Playing
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
Recommended image3
AIADMK: விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved