MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று முதல் 7 நாட்களுக்கு! சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை அப்டேட்!

இன்று முதல் 7 நாட்களுக்கு! சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : May 01 2025, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Rain

Tamilnadu Rain

தமிழ்நாட்டில் ஒருசில  இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Heavy Rain

Heavy Rain

லேசானது முதல் மிதமான மழை

மே 02 மற்றும் 03ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் மே 4 மற்றும் 07ம் தேதி தமிழகத்தில் ஒருசில காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். இடங்களிலும், புதுவை மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Related Articles

Related image1
தமிழகத்துக்கு இன்று டேஞ்சர் அலர்ட் கொடுத்து பொதுமக்களை அலறவிடும் வானிலை மையம்!
Related image2
என்னது! கோடை மழை கொட்டித்தீர்க்க போகுதா? வானிலை மையம் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்!
35
Temperature

Temperature

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் 04ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். அதேபோல்  மே 5ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும். 

45
Heatwave

Heatwave

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

இன்று முதல் 03ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே 04 மற்றும் 05ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். என தெரிவித்துள்ளது. 

இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்
என தெரிவித்துள்ளது. 

55
Chennai weather

Chennai weather

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கோடைக்காலம்
வெப்ப அலை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
தமிழகத்துக்கு இன்று டேஞ்சர் அலர்ட் கொடுத்து பொதுமக்களை அலறவிடும் வானிலை மையம்!
Recommended image2
என்னது! கோடை மழை கொட்டித்தீர்க்க போகுதா? வானிலை மையம் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved