- Home
- Tamil Nadu News
- பொதுமக்களே தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! வார்னிங் கொடுத்த கையோடு ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
பொதுமக்களே தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! வார்னிங் கொடுத்த கையோடு ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
TN Weather Update: தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Update
தமிழகத்தில் கோடையில் வெயில் தொடங்கியதை அடுத்து சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
tamilnadu rain
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் , வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
heavy rain
அதேபோல் மார்ச் 17 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
heatwave in tamilnadu
இன்று முதல் மார்ச் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
Chennai Weather
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.