MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இலவசங்களே இல்லாத ஆட்சி அமையுமா? கடனில் தவிக்கும் மாநிலத்தை மீட்கப்போவது யார்?

தமிழகத்தில் இலவசங்களே இல்லாத ஆட்சி அமையுமா? கடனில் தவிக்கும் மாநிலத்தை மீட்கப்போவது யார்?

Freebie Free Tamil Nadu 2026 Election Manifestos Tamil: இலவசம் இல்லாமல் ஆட்சி அமைப்பது என்பது கடினமானது தான். ஆனால், சாத்தியமற்றது கிடையாது. எப்போது மக்கள் தரமான வாழ்வாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அப்போதுதான் தரமான சரியான ஆட்சி அமையுமா?

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 24 2026, 08:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இலவசம் மற்றும் தள்ளுபடி
Image Credit : google

இலவசம் மற்றும் தள்ளுபடி

இலவசம் மற்றும் தள்ளுபடி என்பது இன்றைய தமிழக அரசியலை பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. எப்போது அரசியல் வருகிறதோ அப்போதெல்லாம் மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் என்ன இலவசம் கொடுப்பார்கள், எதை தள்ளுபடி செய்வார்கள் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கும். இதை அரசியல் தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தமிழக அரசியலையும், இலவசத்தையும் பிரிக்க முடியாதா என்றால் முடியும். அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
1. அரசியல் யதார்த்தம் (Political Reality)
Image Credit : Asianet News

1. அரசியல் யதார்த்தம் (Political Reality)

இலவசம் என்பது எப்போது ஆரம்பமானது தெரியுமா? கடந்த 1960ஆம் ஆண்டு காலத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த இலவசம் இன்று ஒரு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவசங்கள் பெரிய அளவில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்சி அறிவிக்கும் இலவசத்தை விட மற்றொரு கட்சி பெரிய அறிவிப்பை வெளியிடும்போது, மக்கள் இயல்பாகவே கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பக்கம் சாய்கிறார்கள். அரசியல் கட்சிகளின் கொள்கைகளை விட, நமக்கு என்ன கிடைக்கும்? என்ற நேரடிப் பலனை மக்கள் எதிர்பார்ப்பது கட்சிகளை இலவசங்களை நோக்கித் தள்ளுகிறது.

சென்னையில் திமுகவுக்கு செக்.! தளபதி வசமாகும் தலைநகரம்.! உக்கிரத்தில் உதயநிதி

35
2. இலவசம் vs மக்கள் நலத்திட்டங்கள்
Image Credit : X

2. இலவசம் vs மக்கள் நலத்திட்டங்கள்

பொருளாதார அறிஞர்கள் இலவசங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்:

பயனுள்ளவை: கல்விக்கான விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, மதிய உணவுத் திட்டம் மற்றும் மகளிர் இலவசப் பேருந்து பயணம் போன்றவை. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற உதவுகின்றன. இது 'சமூக முதலீடு' எனக் கருதப்படுகிறது.

பயனற்றது: டிவி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற நுகர்வுப் பொருட்கள். இவை தற்காலிக மகிழ்ச்சியைத் தருமே தவிர, நிரந்தரப் பொருளாதார முன்னேற்றத்தைத் தராது.

’குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ்... மருத்துவப்படிப்புக்கு 10% இடஒதுக்கீடு..! அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை

45
3. இலவசம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியுமா?
Image Credit : our own

3. இலவசம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியுமா?

கண்டிப்பாக இலவசம் என்ற ஒன்று இல்லாமல் எந்தவொரு அரசியல் தலைவராலும் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அதற்கு சில மாற்றங்கள் தேவை: அதாவது, நாங்கள் இலவசம் தரமாட்டோம், ஆனால் தரமான கல்வி, உலகத்தரம் வாய்ந்த இலவச மருத்துவம், மற்றும் தடையில்லாத வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற உறுதியான மாற்றத்தை மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும்.

ஒரு நாட்டின் கடன் எப்போது அதிகரிக்கிறது என்றால் அது கட்சி தலைவர் கொடுக்கும் இலவசம் என்ற ஒன்றால் மட்டுமே. இதற்கு பதிலாக தரமான மருத்துவம், தரமான கல்வியை கொடுத்தால் வெளிநாடு மற்றும் தனியார் மருத்துவமனையை நாடி செல்ல தேவையில்லை. நாட்டின் கடன் சுமையும் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. இலவசங்கள் கொடுக்கும் போது அது மறைமுகமாக விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலவசம் தரமாட்டோம்" என்று சொல்லும் கட்சி, அடிப்படை வசதிகளை (சாலை, குடிநீர், மின்சாரம்) ஊழல் இல்லாமல் வழங்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்க வேண்டும்.

55
4. தற்போதைய அரசியல் களம் (2026 நிலவரப்படி)
Image Credit : Asianet News

4. தற்போதைய அரசியல் களம் (2026 நிலவரப்படி)

தற்போது தமிழக அரசியலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் ஓரளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போன்றவை "இலவசம் அல்ல, உரிமைகளும் தரமான சேவைகளுமே முக்கியம்" என்ற கருத்தை முன்னெடுத்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் விவசாயத்தை அரசுப் பணியாக்குவோம், கல்வி-மருத்துவத்தை இலவசமாக்குவோம்" என்கிறார். இதே போன்று தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் அடிப்படை மாற்றங்களை வலியுறுத்துகிறார்.

எனினும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்றால், அதற்கு அவர்களது கூட்டணி மற்றும் பிரச்சாரம், நேர்மறை சிந்தனை ஆகியவை தான் முக்கிய காரணமாக அமையும். எந்தவொரு அரசியல் கட்சி தலைவர் எதிர்மறை விமர்சனமே இல்லாமல் தேர்தலில் முன்னோக்கி செல்கிறாரோ அவரால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றி காண முடியும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு அரசு
தேர்தல்
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
டிவி.கே. விஜய்
சீமான்
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜக கூட்டணி
பிஜேபி
Latest Videos
Recommended Stories
Recommended image1
’குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ்... மருத்துவப்படிப்புக்கு 10% இடஒதுக்கீடு..! அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை
Recommended image2
Now Playing
ஜெயலலிதா எடுத்த சாட்டை...திமுகவினரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை ! அதிர வைத்த அரசியல் ஆட்டம்.!
Recommended image3
சென்னையில் திமுகவுக்கு செக்.! தளபதி வசமாகும் தலைநகரம்.! உக்கிரத்தில் உதயநிதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved