MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Budget: கடைசி பட்ஜெட்டில் கூட பொய் தான்..! அண்ணாமலை கடும் விமர்சனம்

TN Budget: கடைசி பட்ஜெட்டில் கூட பொய் தான்..! அண்ணாமலை கடும் விமர்சனம்

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 17 2026, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கடைசி பட்ஜெட்டிலும் பொய்..
Image Credit : Asianet News

கடைசி பட்ஜெட்டிலும் பொய்..

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.

கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தமிழகத்தின் கடன் சுமை
Image Credit : x

தமிழகத்தின் கடன் சுமை

கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?

34
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்
Image Credit : Asianet News

கோவை, மதுரை மெட்ரோ திட்டம்

திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

44
பட்ஜெட்டை அவசரமாக வாசித்த அமைச்சர்
Image Credit : Asianet News

பட்ஜெட்டை அவசரமாக வாசித்த அமைச்சர்

நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.

முதலமைச்சரின் தந்தை மறைந்த திரு கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
அண்ணாமலை பாஜக
தமிழ்நாடு பட்ஜெட்
பட்ஜெட் 2026
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
Recommended image2
Ration Card : ரேஷன் கார்டு அப்டேட் பண்ண சூப்பர் வாய்ப்பு! சென்னையில் நடக்கும் சிறப்பு முகாம்!
Recommended image3
Now Playing
பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
Related Stories
Recommended image1
சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
Recommended image2
இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved