சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தமிழக பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷாவை தட்டி தூக்கிய போலீஸ்
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

m s shah
தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் பாலியல் குற்றங்களுக்கு தண்டனையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் உல்லாசத்தில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
sexual assault
மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் தந்தை புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மகளின் செல்போனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகராக உள்ள எம்.எஸ்.ஷாவிடம் இருந்து ஆபாசமான உரையாடல்கள் மற்றும் ஆபாச படங்கள் வந்திருந்தாக கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக தனது மகளிடம் விசாரித்த போது தனது தாய் தன்னை பள்ளிக்கு செல்ல விடாமல் பாஜக பிரமுகரிடம் அழைத்து சென்று தனிமையில் ஒன்றாக இருக்க வைத்ததாக கூறியிருந்தார். மேலும் ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துசென்று பாஜக நிர்வாகி தன்னை பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
m s shah
மேலும் தனது மனைவியின் கடனை அடைத்து விடுவதாக கூறி தனது மனைவியோடும் தகாத உறவில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா இருந்துள்ளதாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை போலீசார் நடத்திவந்தனர்.
m s shah arrest
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இவ்வழக்கில் முகாந்திரம் இருப்பதால்வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பேரில் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவிடம் அனைத்து மகளிர் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்திய நிலையில், இன்று மதியம் பாஜக நிர்வாகி எம்.எஸ். .ஷா வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.