MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Bank Account Death Claim: வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணத்தை பெறுவது எப்படி? நாமினி முதல் வாரிசு வரை!

Bank Account Death Claim: வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணத்தை பெறுவது எப்படி? நாமினி முதல் வாரிசு வரை!

Bank Account Death Claim: வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணம் என்ன ஆகும்? நாமினி அல்லது சட்ட வாரிசுகள் எப்படி உரிமை கோருவது, தேவையான ஆவணங்கள், claim செய்யும் முறை போன்ற விதியை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 30 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணம் என்ன ஆகும்?
Image Credit : Pinterest

வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணம் என்ன ஆகும்?

ஒருவர் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருக்கும்போது அவர் இறந்துவிட்டால், அந்தப் பணம் வங்கிக்குச் சொந்தமாகிவிடாது. ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்களின்படி , தகுதியுடைய நாமினி, இணைக் கணக்கு வைத்திருப்பவர் (Joint Account) அல்லது சட்ட வாரிசுகள் உரிய நடைமுறையைப் பின்பற்றி அந்தத் தொகையைப் பெறலாம்.

கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்தத் தகவலை அவர் கணக்கு வைத்திருந்த வங்கிக் கிளைக்கு (Home Branch) உடனடியாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். தகவல் கிடைத்ததும், கணக்கில் இருந்து முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், வங்கி அந்த கணக்கை முடக்கும் (Freeze).

முதலில், அந்தக் கணக்கில் நாமினி (Nominee) குறிப்பிடப்பட்டுள்ளாரா? அல்லது Joint Account-ல் உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நாமினி மூலம் பணத்தைப் பெறும் நடைமுறை
Image Credit : Pinterest

நாமினி மூலம் பணத்தைப் பெறும் நடைமுறை

  • வங்கி கணக்கில் நாமினி (Nominee) நியமிக்கப்பட்டிருந்தால் பணத்தைப் பெறுவது மிகவும் எளிது.
  • வங்கியிடம் “Claim Form for Nominee” படிவத்தைப் பெற்று, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட Claim Form உடன் இறப்புச் சான்றிதழ் மற்றும் நாமினியின் KYC ஆவணங்கள், உதாரணமாக ஆதார், PAN போன்றவற்றை இணைக்க வேண்டும்.
  • வங்கி அதிகாரிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் நாமினி விவரங்களைச் சரிபார்ப்பார்கள்.
  • சரிபார்ப்பு முடிந்த பிறகு, வங்கியின் நடைமுறைக்கு ஏற்ப கணக்கில் உள்ள தொகை நாமினியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படலாம் அல்லது காசோலையாக (Cheque/DD) போன்ற அங்கீகரிக்கப்பட்ட முறையில் வழங்கப்படலாம்.
35
நாமினி இல்லையென்றால்
Image Credit : Pinterest

நாமினி இல்லையென்றால்

  • நாமினி பதிவு செய்யப்படாத கணக்கில், சட்டப்பூர்வ வாரிசுகள் வங்கியை அணுகி பணத்தைக் claim செய்ய வேண்டும்.
  • கணக்கில் உள்ள தொகையின் அளவு மற்றும் வங்கியின் நடைமுறையைப் பொறுத்து ஆவணங்கள் கேட்கப்படலாம்.
  • வட்டாட்சியர் (Tahsildar) மூலம் பெறப்பட்ட சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
  • எதிர்காலத்தில் வேறு யாரேனும் உரிமை கோரினால் அதற்கு நாங்களே பொறுப்பு என உறுதி அளிக்கும் படிவத்தில் அனைத்து வாரிசுகளும் கையெழுத்திட வேண்டும்.
  • முதன்மை வாரிசு பணத்தைப் பெற மற்ற அனைத்து வாரிசுகளும் ஆட்சேபனை இல்லை என கையொப்பமிட்ட ஆவணம் NOC (No Objection Certificate) தர வேண்டும்.
  • சிறிய தொகை முதல் பெரிய தொகை வரை தேவையான ஆவணங்கள் வங்கியின் விதிமுறைகளின்படி மாறலாம்.
45
இணைக் கணக்கு (Joint Account) என்றால்?
Image Credit : Pinterest

இணைக் கணக்கு (Joint Account) என்றால்?

”Either or Survivor” முறையில் கணக்கு இருந்தால், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்தபோது, உயிருடன் இருக்கும் மற்றவர் (Survivor) இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வங்கியின் நடைமுறைகளைப் பின்பற்றி கணக்கைத் தொடர்ந்து இயக்கலாம் அல்லது கணக்கில் உள்ள தொகையைப் பெறலாம்.

”Jointly” முறையில் கணக்கு இயக்கப்பட்டிருந்தால், ஒருவர் இறந்த பிறகு உயிருடன் இருக்கும் கணக்கு வைத்திருப்பவர் மட்டும் தன்னிச்சையாக முழுத் தொகையையும் பெற முடியாது.

இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே உயிருடன் இருப்பவர் பணத்தைப் பெற முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • நபர் இறந்த பிறகு அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுப்பது சட்டப்படி குற்றமாகும்.
  • இறந்தவருக்கு ஏதேனும் கடன்கள் இருந்தால், வங்கி கணக்கில் உள்ள தொகையிலிருந்து அந்த நிலுவையை ஈடுசெய்ய வங்கிக்கு உரிமை உண்டு.

10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கில் உரிமை கோரப்படாவிட்டால், அந்தப் பணம் ரிசர்வ் வங்கியின் (RBI) DEAF Fund (Depositor Education and Awareness Fund)-க்கு மாற்றப்படும்.

தேவையான ஆவணங்களைச் சேகரித்தல்

வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, பொதுவாக சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும்.

  • இறப்புச் சான்றிதழ் (Death Certificate): அசல் மற்றும் நகல்.
  • வங்கி தொடர்பான ஆவணங்கள்: இறந்தவரின் சேமிப்புக் கணக்குப் புத்தகம் (Passbook), காசோலை புத்தகம் (Cheque Book) மற்றும் ATM/Debit Card இருந்தால் அவற்றைச் சமர்ப்பிக்கலாம்.
  • உரிமை கோருபவரின் ஆவணங்கள்: ஆதார் அட்டை, PAN Card உள்ளிட்ட அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று.
  • நாமினி இருந்தால்: நாமினி தொடர்பான அடையாள மற்றும் வங்கி விவரங்களும் கேட்கப்படலாம்.
55
15 நாட்கள் என்றால் என்ன?
Image Credit : Gemini Ai

15 நாட்கள் என்றால் என்ன?

  • வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, நாமினி அல்லது உரிமை கோருபவர் (Claimant) வங்கியிடம் பணத்தைப் பெறுவதற்கான Claim-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
  • தேவையான இறப்புச் சான்றிதழ் மற்றும் Claim-ஐ பரிசீலிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அந்த Claim-ஐ வங்கி பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தீர்வு செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த காலக்கெடு கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக:

ஒருவர் செப்டம்பர் 1-ம் தேதி இறந்தார் என வைத்துக்கொள்வோம். ஆனால் நாமினி தேவையான ஆவணங்களுடன் Claim-ஐ செப்டம்பர் 5-ம் தேதி வங்கியில் சமர்ப்பித்தார். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்து Claim ஏற்றுக்கொள்ளப்பட்டால், செப்டம்பர் 5-ம் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வங்கி Claim-ஐத் தீர்வு செய்ய வேண்டும்.

இறந்தவரின் பெயரில் Fixed Deposit இருந்தால் என்ன செய்வது?

இறந்தவரின் பெயரில் Fixed Deposit (FD) இருந்தாலும் அதை Claim செய்ய முடியும். RBI வழிகாட்டுதலில், FD காலம் முடிவடையவில்லை என்றாலும், வங்கியின் நடைமுறைகளைப் பின்பற்றி அதை முன்கூட்டியே முடித்து தொகையைப் பெறுவதற்கான வசதி இருக்க வேண்டும்.

FD maturity ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இறந்தவரின் நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு வங்கியை அணுகி தேவையான இறப்புச் சான்றிதழ், Claim Form, KYC மற்றும் பொருந்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்து, வங்கியின் நடைமுறையின்படி Claim செய்யலாம்.

நாமினியை பதிவு செய்து வைப்பது ஏன் முக்கியம்?

  • வங்கி கணக்கில் Nominee (நாமினி) விவரங்களை பதிவு செய்து வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், கணக்கில் உள்ள தொகைக்கான Claim Settlement நடைமுறையை எளிதாக்க இது உதவும்.
  • RBI-யும் வங்கி கணக்குகள் மற்றும் பிற நிதிச் சொத்துகளில் nomination வசதியைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

அதனால், உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வங்கி கணக்குகளில் யார் நாமினியாக பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பதைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. நாமினி மாறியிருந்தால் அல்லது இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், வங்கியின் நடைமுறையைப் பின்பற்றி விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்நாடு பொருளாதாரம்
வங்கி விதிகள்
வங்கிக் கணக்கு
வங்கி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card Update: 3 மாத கால அவகாசம்! முடங்கிய ரேஷன் கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?
Recommended image2
Now Playing
தூத்துக்குடி பெருங்குளம் குளங்களில் அரிய வகை நீர்வாழ்பறவைகள் கூட்டம்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
Recommended image3
Missing Bag on Train: டிரெயின்லேயே பேக்கை மறந்துட்டீங்களா? பதற்றப்படாதீங்க..139-க்கு உடனே கால் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Bank Loan: வங்கிக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு... இனி அலைச்சல் இல்லை... எல்லாமே டிஜிட்டல் மயம்!
Recommended image2
Bank Job: வங்கி வேலை தேடுறீங்களா? TMB-ல் சூப்பர் வாய்ப்பு..நல்ல சம்பளம், உடனே விண்ணப்பிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved