MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Bank Job: வங்கி வேலை தேடுறீங்களா? TMB-ல் சூப்பர் வாய்ப்பு..நல்ல சம்பளம், உடனே விண்ணப்பிங்க!

Bank Job: வங்கி வேலை தேடுறீங்களா? TMB-ல் சூப்பர் வாய்ப்பு..நல்ல சம்பளம், உடனே விண்ணப்பிங்க!

Bank Job: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதற்கான கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் தேதிகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 27 2026, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கி வேலை
Image Credit : Pinterest

வங்கி வேலை

வங்கித் துறையில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Ltd) சார்பில் Relationship Manager, Senior Relationship Manager உள்ளிட்ட பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
என்னென்ன பணிகள்?
Image Credit : Pinterest

என்னென்ன பணிகள்?

தற்போது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் உறவு மேலாளர் ( Relationship Manager) மற்றும் மூத்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் ( Senior Relationship Manager) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Relationship Manager – மேலாளர் / உதவி மேலாளர் நிலை
  • Senior Relationship Manager –மூத்த மேலாளர் / உதவி துணைத் தலைவர் (AVP) நிலை

இந்தப் பணிகளுக்கான மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை வங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையாக வெளியிடவில்லை. மேலும், தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள வங்கியின் கிளைகள் அல்லது அலுவலகங்களில் பணியமர்த்தப்படலாம். இந்த நியமனம் Regular Basis அடிப்படையில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
கல்வித்தகுதி
Image Credit : Pinterest

கல்வித்தகுதி

இந்தப் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வழக்கமான கல்வி முறையில் (Regular Stream) குறைந்தது 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2026 ஆகஸ்டு 31 ஆம் தேதி அன்று கணக்கிடும்போது விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

பணி அனுபவம்

மேலாளர் பதவி - வங்கித் துறையில் தொடர்புடைய பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி மேலாளர் - தொடர்புடைய பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக கடன் வழங்கல், MSME கடன் அல்லது சில்லறை கடன் தொடர்பான பணிகளில், அதாவது வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் போன்ற பணிகளில் அனுபவம் இருப்பவர்களுக்கு இந்தப் பணி பொருத்தமானதாக இருக்கும்.

45
Senior Relationship Manager பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Pinterest

Senior Relationship Manager பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

2026 ஆகஸ்டு 31 ஆம் தேதி அன்று கணக்கிடும்போது விண்ணப்பதாரர்களின் வயது 28 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படலாம்.

பணி அனுபவம்

Loan அல்லது MSME Loan போன்ற கடன் தொடர்பான பணிகளில், குறிப்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் மொத்தம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த 5 ஆண்டு அனுபவத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் Relationship Manager ஆக பணியாற்றிய அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.

தேர்வு எப்படி?

விண்ணப்பங்கள் முதலில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு ( Personal Interview) அழைக்கப்படுவர். நேரடியாகவோ அல்லது Video Conferencing மூலமாகவோ நேர்காணல் நடத்தப்படலாம்.

55
முக்கிய தேதிகள்
Image Credit : Pinterest

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி - செப்டம்பர் 23
  • ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி - அக்டோபர் 7
  • விண்ணப்ப முறை - ஆன்லைன்
  • விண்ணப்பக் கட்டணம் - இல்லை
  • பணியிடம் - இந்தியா முழுவதும்

சம்பள விவரங்கள்

வாடிக்கையாளர் உறவு மேலாளர் - ஆண்டுக்கு ரூ 9.40 லட்சம் முதல் ரூ.13.00 லட்சம் வரை

மூத்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் - ஆண்டுக்கு ரூ.17.60 லட்சம் முதல் ரூ.19.50 லட்சம் வரை

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் TMB-யின் https://tmb.bank.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

அனைத்து தகவல்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Jobs 10th Pass: 10, 12 & ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க! முழு விபரம் உள்ளே
Recommended image2
8th Pay Commission pension: லெவல் 1-18 ஊழியர்களுக்கு ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் ஏன் முக்கியக் கோரிக்கையாக உள்ளது?
Recommended image3
8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர், ஓய்வூதியம்… 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் – தவறவிடாதீர்கள்!
Related Stories
Recommended image1
Bank Holidays: Festival Season தொடங்குது.! அக்டோபரில் இத்தனை நாள் வங்கிகள் இயங்காது.! உடனே நோட் பண்ணுங்க!
Recommended image2
Bank Customer Alert: 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் இதை முன்கூட்டியே முடிச்சிடுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved