Special Train: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! தொடர் விடுமுறை! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Special Train: பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பொதுமக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தையே அதிகளவில் விரும்புகின்றனர். குறிப்பாக பாதுகாப்பான பயணம் அத்தியாவசிய வசதிகள் மற்றும் குறைந்த கட்டணம் என்பதால் அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது. தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை, தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக பொதுமக்கள் சிரமமின்றி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆயுதபூஜை வருகிற 11-ம் தேதி வெள்ளிக்கிழமையும், விஜயதசமி 12ம் தேதி சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர் விடுமுறை வருகிறது. ஆகையால் சொந்த ஊருக்கு செல்வதற்கும், குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் விடுமுறை முடிந்து சென்னை திருப்புவதற்கு ஏதுவாக திருச்சி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திங்கள், வியாழன் தவிர்த்து இந்த ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து, மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
specai train
அதேபோல கோவை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 6ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் 7ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அக்டோபர் 8-ம் தேதி சிறப்பு ரயில் இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மறுநாள் பிற்பகல் 13:50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 4:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.