- Home
- Tamil Nadu News
- மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இளைஞர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஹோட்டல் மேனேஜ்மன்ட் படிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் www.tahdco.com விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன என்ன படிப்புகள்.?
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு
B.Sc Hospitality & Hotel Administration 3 years full time Diploma in Food Production - 1 1/2 years full time
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு
Craftmanship Course in Food
Production & Patisserie 1 1/2 years பயிற்சி வழங்கப்படுகிறது.
மாத ஊதியம் எவ்வளவு.?
தகுதிகள் :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
10 மற்றும் 12ம் வகுப்பில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் <3 லட்சம்
ஆரம்ப கால மாத ஊதியம் 25,000 to 35,000 பின்னர் திறமைக்கேற்றவாறு 50,000 to 70,000 வரை பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.