MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • App Scam : ₹50,000 போட்டால் 45 நாளில் டபுள்.. மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிக்கியது எப்படி? நீங்களும் உஷார்!

App Scam : ₹50,000 போட்டால் 45 நாளில் டபுள்.. மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிக்கியது எப்படி? நீங்களும் உஷார்!

App Scam : ₹50,000 முதலீடு செய்தால் 45 நாளில் பணம் இரட்டிப்பு என ஆசைகாட்டி மதுரை சுற்றுவட்டார பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. 34,000 புகார்கள் குவிந்த நிலையில், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 31 2026, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
₹50,000 போட்டால் டபுள்!
Image Credit : Chatgpt

₹50,000 போட்டால் டபுள்!

₹50,000 முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும்.. தினமும் டாலரில் வருமானம் கிடைக்கும்.. அதிகமானவர்களை சேர்த்தால் கூடுதல் போனஸ் கிடைக்கும்.. இப்படியான ஆசைவார்த்தைகளை நம்பி மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

FQL Exchange என்ற செயலியை மையமாக வைத்து இந்த மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கிராமப்புற பெண்கள் அதிகளவில் இந்த மோசடியில் சிக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் லாபம் கிடைப்பது போல காட்டி, பின்னர் அதிக தொகையை முதலீடு செய்ய வைத்ததாக கூறப்படும் இந்த மோசடி எப்படி நடந்தது?

இதையும் படிங்க : Nepal Flood : பயங்கர வெள்ளத்திலும் இந்த வீடு மட்டும் எப்படி தப்பியது?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முதலில் லாபம் வந்தது.. பிறகுதான் பெரிய ஆட்டம்!
Image Credit : Chatgpt

முதலில் லாபம் வந்தது.. பிறகுதான் பெரிய ஆட்டம்!

இந்த மோசடியில் பலர் சிக்கியதற்கு முக்கிய காரணம், ஆரம்பத்தில் சில முதலீட்டாளர்களுக்கு பணம் மற்றும் போனஸ் கிடைத்ததாகக் கூறப்படுவதுதான்.செயலியில் தினமும் பணம் வருவதைப் பார்த்தவர்கள், இது உண்மையான முதலீட்டுத் திட்டம் என்று நம்பத் தொடங்கியுள்ளனர்.

மேலும், இரண்டு பேரை திட்டத்தில் இணைத்தால் கூடுதல் போனஸ் கிடைக்கும் என்று கூறப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதலீடு செய்தவர்களே தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் இந்தத் திட்டத்தில் இணைத்துள்ளனர்.

ரூ.50,000-ல் தொடங்கிய முதலீடு பின்னர் ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம் என அதிகரித்துள்ளது. சிலர் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!

Related Articles

Related image1
Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!
Related image2
Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
36
நகையை அடகு வைத்து.. கடன் வாங்கி முதலீடு!
Image Credit : Chatgpt

நகையை அடகு வைத்து.. கடன் வாங்கி முதலீடு!

அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த ஏஜெண்டுகள் மூலம் இந்தத் திட்டம் பல கிராமங்களுக்குப் பரவியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலியில் முதலீடு செய்த பணம் அமெரிக்க டாலர் மதிப்பில் இருப்பது போலவும், தினசரி வருமானம் கிடைப்பது போலவும் காட்டப்பட்டதாக புகார்கள் கூறுகின்றன. சிலருக்கு ஆன்லைனில் குறிப்பிட்ட பணிகளை வழங்கி, அதற்கும் சிறிய அளவில் கமிஷன் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் செயலியில் அதிகரிக்கும் தொகையை பார்த்தவர்கள், தங்களது பணமும் உண்மையில் வளர்ந்து வருவதாக நம்பியிருக்கலாம்.

இதையும் படிங்க : Parotta Tips : பூ மாதிரி சாஃப்ட்டா பரோட்டா செய்வது எப்படி?

46
திடீரென செயலிழந்த App.. பணத்தை எடுக்க முடியவில்லை!
Image Credit : Chatgpt

திடீரென செயலிழந்த App.. பணத்தை எடுக்க முடியவில்லை!

எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், FQL செயலி திடீரென செயலிழந்ததாக போலீசில் புகார் அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் தொழில்நுட்பக் கோளாறு என்று கூறப்பட்டதாகவும், பின்னர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் அழிந்துவிட்டதாகக் கூறி, பணத்தை மீட்டெடுக்க மேலும் 200 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்று கேட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்த நிலையில், மீண்டும் பணம் செலுத்துமாறு கேட்கப்பட்டதால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து ஏஜெண்டுகளிடம் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதற்குள் முக்கிய நபர்கள் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Jail Food : சிறைக் கைதிகள் என்ன சாப்பிடுவாங்க? கேப்பையோ களியோ இல்ல! இதுதான் மெனு!

56
34,000 புகார்கள்.. 18 பேர் கைது!
Image Credit : Chatgpt

34,000 புகார்கள்.. 18 பேர் கைது!

மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் போலீசில் புகார் அளிக்கத் தொடங்கினர். குறிப்பாக, ஒரே நாளில் சுமார் 5,000 பேர், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், மேலூரில் திரண்டு புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆரம்பத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆகஸ்ட் 31 நிலவரப்படி, சுமார் 34,000 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!

66
“45 நாளில் பணம் டபுள்”.. நம்புவதற்கு முன் இதை பாருங்க!
Image Credit : Chatgpt

“45 நாளில் பணம் டபுள்”.. நம்புவதற்கு முன் இதை பாருங்க!

FQL மோசடி ஒரு முக்கியமான எச்சரிக்கையை கொடுக்கிறது. “குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு”, “உறுதியான அதிக லாபம்”, “தினசரி வருமானம்” போன்ற வார்த்தைகள் முதலீட்டாளர்களை ஈர்க்க பயன்படுத்தப்படலாம். குறிப்பாக, தெரியாத செயலி மூலம் முதலீடு செய்யச் சொல்வது, தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பச் சொல்வது அல்லது பணத்தை திரும்பப் பெற கூடுதல் கட்டணம் கேட்பது போன்றவை ஆபத்தான அறிகுறிகள். செயலியில் லாபம் அதிகரித்துக் கொண்டிருப்பது மட்டும், அந்தப் பணம் உண்மையில் இருப்பதற்கான ஆதாரம் கிடையாது.

மதுரையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த சம்பவத்தில், சேமிப்பு பணம் மட்டுமின்றி நகை மற்றும் கடன் பணத்தையும் முதலீடு செய்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பணத்தை இழந்தால், தாமதிக்காமல் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணிலும் cybercrime.gov.in தளத்திலும் புகார் அளிப்பது முக்கியம். பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசை காட்டிலும், அந்த முதலீடு உண்மையானதா என்பதை முதலில் சரிபார்ப்பதே பாதுகாப்பானது.

இதையும் படிங்க : Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆப்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aavin Milk Price:பால் கொள்முதல் விலை ரூ.44.! இனி ஆவின் பால் விலை என்ன ஆகும்?
Recommended image2
SBI Recruitment 2026: வங்கி வேலைக்கு தேர்வு இல்லை.! உடனே விண்ணப்பித்தால் Job உறுதி.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image3
Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!
Related Stories
Recommended image1
Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!
Recommended image2
Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved